Friday, September 4, 2020

VIDHAITHA VIDHAI - ETHANAI KONAM ETHANAI PARVAI


படம்: எத்தனை கோணம் எத்தனை பார்வை 
பாடல்: கங்கை அமரன் 
இசை: இளையராஜா 
குரல்: தீபன் சக்ரவர்த்தி, பி. எஸ். சசிரேகா



விதைத்த விதை
தளிராய் எழுந்து
அரும்பி வரும் பொழுது 

ஆசை அலை 
தினமும் எழுந்து
ஆடிவரும் மனது 

காலங்கள் செய்கின்ற கோலங்கள் புதிது
நாளொன்றும் உள்ளத்தின் எண்ணங்கள் புதிது
பாதை இரண்டு பயணம் இரண்டு
பாதை இரண்டு பயணம் இரண்டு
போனால் என்ன மனம்தானே ஒன்று
போகும் பாதை அது சேரும் இன்று
வேறென்ன நாம் சொல்வது


ம்ஹும் ஹும்
ம்ஹும் ஹும்
விதைத்த விதை
தளிராய் எழுந்து
அரும்பி வரும் பொழுது ம்ஹும் ஹும்
ம்ஹும் ஹும்
ம்ஹும் ஹும்
ஆசை அலை தினமும் எழுந்து
ஆடிவரும் மனது…….


பூவாக பிஞ்சாகக் காயாகும் நினைவு
பூந்தென்றல் காற்றோடு வந்தாடும் கனவு
நாளும் வரவு சேரும் உறவு
நாளும் வரவு சேரும் உறவு
மேலும் மேலும் பல காதல் கோலம்
தோன்றும் காலம் இது காதல் காலம்
ஆனந்தம்……. ஆனந்தமே…..
 
ம்ஹும் ஹும்
ம்ஹும் ஹும்
விதைத்த விதை
தளிராய் எழுந்து
அரும்பி வரும் பொழுது ம்ஹும் ஹும்
ம்ஹும் ஹும்
ம்ஹும் ஹும்
ஆசை அலை தினமும் எழுந்து
ஆடிவரும் மனது…….