இசை: இளையராஜா குரல்: தீபன் சக்ரவர்த்தி, பி. எஸ். சசிரேகா
விதைத்த விதை தளிராய் எழுந்து அரும்பி வரும் பொழுது
ஆசை அலை
தினமும் எழுந்து ஆடிவரும் மனது
காலங்கள் செய்கின்ற கோலங்கள் புதிது நாளொன்றும் உள்ளத்தின் எண்ணங்கள் புதிது பாதை இரண்டு பயணம் இரண்டு பாதை இரண்டு பயணம் இரண்டு போனால் என்ன மனம்தானே ஒன்று போகும் பாதை அது சேரும் இன்று வேறென்ன நாம் சொல்வது
ம்ஹும் ஹும் ம்ஹும் ஹும் விதைத்த விதை தளிராய் எழுந்து அரும்பி வரும் பொழுது ம்ஹும் ஹும் ம்ஹும் ஹும் ம்ஹும் ஹும் ஆசை அலை தினமும் எழுந்து ஆடிவரும் மனது…….
பூவாக பிஞ்சாகக் காயாகும் நினைவு பூந்தென்றல் காற்றோடு வந்தாடும் கனவு நாளும் வரவு சேரும் உறவு நாளும் வரவு சேரும் உறவு மேலும் மேலும் பல காதல் கோலம் தோன்றும் காலம் இது காதல் காலம் ஆனந்தம்……. ஆனந்தமே…..
ம்ஹும் ஹும் ம்ஹும் ஹும் விதைத்த விதை தளிராய் எழுந்து அரும்பி வரும் பொழுது ம்ஹும் ஹும் ம்ஹும் ஹும் ம்ஹும் ஹும் ஆசை அலை தினமும் எழுந்து ஆடிவரும் மனது…….
ஆகாயச் சூரியனை ஒற்றை ஜடையில் கட்டியவள் நின்றாடும் விண்மீனை நெற்றிச் சுட்டியில் ஒட்டியவள் ஆகாயச் சூரியனை ஒற்றை ஜடையில் கட்டியவள் நின்றாடும் விண்மீனை நெற்றிச் சுட்டியில் ஒட்டியவள் இவள் தானே எரிமலை அள்ளி மருதாணி போல் பூசியவள்
கொடி நான் உன் தேகம் முற்றும் சுற்றிக் கொண்ட
கொடி நான் என் எண்ணம் எதுவோ???
கிளி தான் உனை கொஞ்சம் கொஞ்சம் கொத்தி தின்னும்
கிளி தான் உனை கொஞ்சும் எண்ணமோ???
ஆகாயச் சூரியனை ஒற்றை ஜடையில் கட்டியவள் நின்றாடும் விண்மீனை நெற்றிச் சுட்டியில் ஒட்டியவள் நீதானே எரிமலை அள்ளி மருதாணி போல் பூசியவள் அடியே என் தேகம் முற்றும் சுற்றிக் கொண்ட
கொடியே உன் எண்ணம் என்னவோ??? சகியே எனை கொஞ்சம் கொஞ்சம் கொத்தி தின்னும்
கிளியே எனை கொல்லும் எண்ணமோ???
(இசை) காதல் பந்தியில் நாமே உணவு தான்
உண்ணும் பொருளே உன்னை
உண்ணும் விந்தை இங்கே தான் காதல் பார்வையில் பூமி வேறு தான்
மார்கழி வேர்க்கும் சித்திரை குளிரும்
மாறுதல் இங்கே தான் உன் குளிருக்கு இதமாய்
என்னை அடிக்கடி கொளுத்து என் வெயிலுக்கு சுகம்தான்
உன் வியர்வையில் நனைத்து காதல் மறந்தவன் காமம் கடந்தவன்
துறவை துறந்ததும் சொர்க்கம் வந்தது
ஆகாயச் சூரியனை ஒற்றை ஜடையில் கட்டியவள் நின்றாடும் விண்மீனை நெற்றிச் சுட்டியில் ஒட்டியவள் நீதானே எரிமலை அள்ளி மருதாணி போல் பூசியவள்
என்னை கண்டதும் ஏன் நீ ஒளிகிறாய் டோரா போரா மலை சென்றாலும்
துரத்தி வருவேனே உன்னை நீங்கினால் எங்கே செல்வது உன் உள்ளங்கையில் ரேகைக்குள்ளே
ஒளிந்து கொள்வேனே அடி காதல் வந்தும் ஏன் கண்ணாமூச்சி நீ கண்டு கண்டு பிடித்தால் பின் காமன் ஆட்சி கத்தி பறித்து நீ பூவை கிழிக்கிறாய்
பாரம் குறைந்ததில் ஏதோ நிம்மதி
ஆகாயச் சூரியனை ஒற்றை ஜடையில் கட்டியவள் நின்றாடும் விண்மீனை நெற்றி சுட்டியில் ஒட்டியவள் இவள் தானே எரிமலை அள்ளி மருதாணி போல் பூசியவள்
படம்: ஒரு குடும்பத்தின் கதை
பாடல்: வாலி
இசை: சங்கர் கணேஷ்
குரல்: K.J.யேசுதாஸ், B.S. சசிரேகா.
மலைச்சாரலில் இளம்பூங்குயில் - அதன்
மார்பினில் ஒரு ஆண் குயில்
அது நானல்லவா.. துணை நீயல்லவா
அன்பு கீதம் நாம் பாடும் நாள் அல்லவா
ஈரேழு ஜன்மத்தின் பந்தம் இது - ஒரு
இழை கூட பிரியாத சொந்தம் இது
தெய்வீகம் பெண்ணாக நேர் வந்தது - எந்தன்
திருவீதி வழி தேடி தேர் வந்தது
தொடும் உறவானது தொடர் கதையானது
இந்த நாதம் கலையாத இசையானது
(மலை...)
பனி தூங்கும் மலரே உன் மடி என்பது - இரு
கனி தூங்கும் தேன் திராக்ஷை கொடி என்பது
நினைத்தாலும் அணைத்தாலும் கொதிக்கின்றது - அதில்
நான் தேடும் இன்பங்கள் உதிக்கின்றது
விழி சிரிக்கின்றது கவி படிக்கின்றது
திருமேனி தாளாமல் நடிக்கின்றது
படம்: ஒரு வீடு ஒரு உலகம் பாடல்: புலமைப்பித்தன் இசை: MSV குரல்: TL மகராஜன், சசிரேகா ரதி தேவி சந்நிதியில் ரகசிய பூஜைரசமான நினைவுகளில் இதழ்மணி ஓசைரதிமாரன் மந்திரமோ விழிகளின் பாஷைநாள்தோறும் ஓதுவதில் எத்தனை ஆசைஆரூரின் தேரொன்று அசைந்து ஆடி வரும்கோலம் கொண்டதென்னதேவாரப் பாட்டு நீ பாடக் கேட்டுமயங்கி நின்றதென்ன சொல்லதிருமண மேடையில் நாதஸ்வரம்இரு மன மேடையில் நாளும் சுகம்ரதி தேவி சந்நிதியில் ரகசிய பூஜைரசமான நினைவுகளில் இதழ்மணி ஓசைஇதழ்மணி ஓசைநீ தந்த செந்தூரம் நிலைக்க வேண்டுமெனபாடிடும் தென்றல் காற்றுஎன் காதல் தேவி பல்லாண்டு வாழிஇதுவும் தென்றல் சொன்ன பாட்டுஇனித்திடும் மங்கல வாழ்த்துக்களேஇசைத்தன செந்தமிழ் பாட்டுக்களேரதி தேவி சந்நிதியில் ரகசிய பூஜைரசமான நினைவுகளில் இதழ்மணி ஓசைஇதழ்மணி ஓசை
படம் : அன்பை தேடி
பாடல்: கண்ணதாசன்
குரல்: டி எம் எஸ், ஜெயலலிதா
இசை: எம் எஸ் வி
வெளி வந்த ஆண்டு 1974
சித்திர மண்டபத்தில்
சில முத்துக்கள் கொட்டி வைத்தேன்
சித்திர மண்டபத்தில்
சில முத்துக்கள் கொட்டி வைத்தேன்
அதன் தத்துவம் என்னடியோ
உந்தன் முத்திரை போடடியோ
அதன் தத்துவம் என்னடியோ
உந்தன் முத்திரை போடடியோ
கத்திரி பூவிழியில் கொஞ்சம்
கற்பனை எண்ணி வைத்தேன்
கத்திரி பூவிழியில் கொஞ்சம்
கற்பனை எண்ணி வைத்தேன்
அது கட்டிய வட்டங்களோ
இல்லை கொட்டிய முத்தங்களோ
அது கட்டிய வட்டங்களோ
இல்லை கொட்டிய முத்தங்களோ
கத்திரி பூவிழியில் கொஞ்சம்
கற்பனை எண்ணி வைத்தேன்
செம்பொன் மேனி திருச்சபையில்
சேவை செய்ய வந்தேன்
செம்பொன் மேனி திருச்சபையில்
சேவை செய்ய வந்தேன்
சிவந்த பவளப் பெட்டியில்
எந்தன் தேவை கொள்ள வந்தேன்
கும்ப கலசம் மின்னும் அழகு
கோயில் கட்டி வைத்தேன்
கும்ப கலசம் மின்னும் அழகு
கோயில் கட்டி வைத்தேன்
குளிர குளிர ஆடும் வண்ணம்
அருவி கொட்டி வைத்தேன்
சுவைக்க சம்மதமா
இது மறைக்கும் மந்திரமா
சித்திர மண்டபத்தில் சில
முத்துக்கள் கொட்டி வைத்தேன்
இலைகள் மூடும் கனிகள் உண்டு
போதை கொள்ள வந்தேன்
இலைகள் மூடும் கனிகள் உண்டு
போதை கொள்ள வந்தேன்
இடையில் ஆடும் நடன சாலை
பாவம் காண வந்தேன்
சுகம் உலாவும் சொர்க்க லோகம்
நானும் கொண்டு வந்தேன்
சுகம் உலாவும் சொர்க்க லோகம்
நானும் கொண்டு வந்தேன்
தொடரத் தொடர எங்கோ செல்லும்
ஞானம் கொண்டு வந்தேன்
சுவைக்க சம்மதமா
இது மறைக்கும் மந்திரமா
சித்திர மண்டபத்தில் சில
முத்துக்கள் கொட்டி வைத்தேன்
அதன் தத்துவம் என்னடியோ
உந்தன் முத்திரை போடடியோ
Acquaintances reveal that Ms. Jayalalithaa loved books so much that she had a library of her own.
To family and friends, she was only Ammu, a girl who did not talk much but loved the world of words. Educationist and Founder PSBB Schools, Mrs. YGP, recalled Ms. Jayalalithaa’s fondness for books and said she had a library of her own.
“Her mother Sandhya and her aunt Vidhya used to act in YGP’s (Y.G.Parthasarathy, actor and founder of United Amateur Artists) plays. This girl, who used to be just 3-4 years then used to come to the rehearsals with her mother and used to play with my son Mahendra (also an actor). On her 60th birthday, she came home to take my blessings and gave me a sari. She said I was like her mother. She missed her mother a lot and couldn’t bear the separation when she passed away,” recalled Mrs. YGP.
Extraordinary memory
Film writer Chitralaya Gopu recalled her prodiguous memory. He had the good fortune of explaining dialogues and sequences of her first Tamil movie Vennira Aadai to her. “I was an associate to Director Sridhar. Though I would read the dialogues only once, she would grasp quickly and repeat them. She had an extraordinary memory. She was only 16 or 17 then,” he said.
He recalled how he and Mr. Sridhar had gone to the Gymkhana swimming pool, which they frequented, and were introduced to Ms. Jayalalithaa by her family friend V. Gopalakrishnan. “Though after her first Tamil movie our interactions were limited to the time she acted in Galata Kalyanam and Sumathi Enn Sundari — my stories that were made into films — we became good friends and she remained a family friend till the end,” he said.
Punctuality
Film Producer Mukta Srinivasan, who has made over 40 films in a career spanning 70 years, said Ms. Jayalalalithaa's punctuality was something that he appreciated. “She had acted in four of my films — Bommalattam, Anbai Thedi, Suryagandhi and Cinema Paithyam — and in all these films she used to be ready with make up and costumes on the set. She also did not like melodrama much. When a director insisted on melodrama, she would show her dislike in a very mild way,” he said. Mr. Srinivasan also recalled her propensity to help needy people. “A writer of mine wanted jobs for his daughters. Though she did not directly intervene, she helped the girls,” he said.
இளமை நாட்டிய சாலை
இயற்கை பூமகள் சோலை
இளமை நாட்டிய சாலை
இயற்கை பூமகள் சோலை
மலர்கள் யாவும் மன்மதக் கோலம்
மனதில் ஆனந்த ராகம்
இளமை நாட்டிய சாலை
இயற்கை பூமகள் சோலை
நீல நிற சேலையில் வானம்
பச்சை நிற சேலையில் பூமி
நீல நிற சேலையில் வானம்
பச்சை நிற சேலையில் பூமி
நதிகளின் வண்ணம் நடமிடும் அன்னம்
நாடக மோகங்கள் தாலாட்டும் தேன் கிண்ணம்
இளமை நாட்டிய சாலை
இயற்கை பூமகள் சோலை
ஆத்தங்கரையில் காத்திருந்தார் மாமா
அங்கே ஆசை வச்சு ஓடி வந்தா பாமா
ஆத்தங்கரையில் காத்திருந்தார் மாமா
அங்கே ஆசை வச்சு ஓடி வந்தா பாமா
ஆடி மாத காத்து போலே
ஆடிப் பாடும் நாத்துப் போலே
காலை பாத்து மெல்ல மெல்ல வாம்மா
ஆத்தங்கரையில் காத்திருந்தார் மாமா
அங்கே ஆசை வச்சு ஓடி வந்தா பாமா
வைகை நதி பெருகி வர
வண்ண மணல் ஊர்ந்து வர
ஊறிவந்த தண்ணியிலே
ஒட்டி வந்த கட்டி முத்து
வைகை நதி பெருகி வர
வண்ண மணல் ஊர்ந்து வர
ஊறிவந்த தண்ணியிலே
ஒட்டி வந்த கட்டி முத்து
நாலு பக்கம் கண்ணிருக்கு அவளுக்கு
அந்த ரகசியத்தில் இடமிருக்கு அவனுக்கு
ஆத்தங்கரையில் காத்திருந்தார் மாமா
அங்கே ஆசை வச்சு ஓடி வந்தா பாமா
பூ மரத்தை குலுக்கிவிட்டு
பூமியெல்லாம் மணக்கவிட்டு
மாமனுக்கு தேன் கொடுக்க
மானைப் போல ஓடி வந்தா
தேன் குடத்தை சுமந்து வந்த செல்லக்கா
நீ ஏன் கொடுத்தாய் இந்த ஆசை சொல்லக்கா
ஆத்தங்கரையில் காத்திருந்தார் மாமா
அங்கே ஆசை வச்சு ஓடி வந்தா பாமா
ஆடி மாத காத்து போலே
ஆடிப் பாடும் நாத்துப் போலே
காலை பாத்து மெல்ல மெல்ல வாம்மா
அண்மையில் மறைந்த திரை உலக ஜாம்பவானான பஞ்சு அருணாசலத்திற்கு பெற்றோர் இட்ட பெயர், அருணாசலம். காரைக்குடியில் பள்ளிப்படிப்பின் போது, அவர் அருணாசலம் என்றுதான் அழைக்கப்பட்டார். ஆனால் அது அவர் தாத்தாவின் பெயர் என்பதால், திருவையாறு பஞ்சநதசுவாமி ஞாபகமாக பஞ்சநதம் என்று பெயர் வைத்து, ‘பஞ்சு’, ‘பஞ்சு’ என்று வீட்டில் அழைத்தார்கள். திரை உலகிற்கு வாய்ப்புத் தேடி வந்த பின், பஞ்சுவையும் அருணாசலத்தையும் இணைத்து, தன்னை பஞ்சு அருணாசலம் என்று அழைத்துக்கொண்டார், பஞ்சு அருணாசலம்!
சென்னையில் பஞ்சுவின் ஒரு சிற்றப்பா, மிகப்பெரிய தயாரிப்பாளரான ஏ.எல். சீனிவாசன். இன்னொரு சிற்றப்பா, பிரபல பாடலாசிரியர் கண்ணதாசன். ஐம்பதுகளின் இறுதி ஆண்டுகளில் கண்ணதாசன் நடத்திக்கொண்டிருந்த ‘தென்றல்’ பத்திரிகையில் சேர்ந்தார் பஞ்சு. அதன் பிறகு, கண்ணதாசன் தானே தயாரித்துக் கொண்டிருந்த ‘கவலை இல்லாத மனிதன்’ படத்திற்கு அவர் பாடல்கள் புனைந்தபோது, அவர் சொல்லச் சொல்ல வரிகளை எழுதும் உதவியாளராக இணைந்தார் பஞ்சு. அது அப்படியொன்றும் மிக எளிதான வேலை இல்லை. கவிஞர் வரிகளை கடகடவென்று கூறும் போது அவற்றை சட்டென்று பிடித்துக்கொண்டு மளமளவென்று எழுதவேண்டும். கையெழுத்தும் மணிமணியாக எல்லோருக்கும் புரியும்படி இருக்க வேண்டும்.
இலக்கியத்தின் மீதும், கவிதைகள் மீதும், சிறுகதைகள், நாவல்கள் படிப்பதிலும், பஞ்சு அருணாசலத்திற்கு இயற்கையாக நாட்டம் இருந்தது. சரத் சந்திரர், பங்கிம் சந்திரர், காண்டேகர் போன்றவர்கள் எழுதிய நாவல்களின் மொழிபெயர்ப்புகளைத் தேடிப் பிடித்து படிப்பார். கண்ணதாசனின் பாடல் வரிகளைக் கேட்டு, படி எடுத்துக்கொடுக்கும் போது, பாடல்களின் அமைப்பும் அவருக்குப் புரிந்தது. அவை திரைக்கதையில் சேரும் விதமும் விளங்கியது. சினிமாவிற்கு திரைக்கதை அமைக்கும் பாணியும் புரிந்தது. கண்ணதாசனின் உதவியாளராக இருக்கும் போதே, பஞ்சுவின் அதிர்ஷ்டத்திற்கு அச்சாரமாக சில பாடல் வாய்ப்புகள் வந்தன. ‘சாரதா’ படத்திற்காக, கே.வி.மகாதேவன் இசையில் பஞ்சு 1961ல் எழுதிய ‘மணமகளே மருமகளே வா வா’, அந்தக் காலத்தின் வெற்றிப் பாடல் மட்டும் அல்ல, இன்றைக்கும் திருமண மண்டபங்களில் ஒலித்துக் கொண்டிருக்கும் பாடல்.
ஜி.கே. வெங்கடேஷ் இசையில், ‘நானும் மனிதன்தான்’ (1964) என்ற படத்தில், ‘காற்று வரும் காலம் ஒன்று’ என்று பஞ்சு எழுதினார். இன்று வரை, பி.பி.ஸ்ரீநிவாஸ், எஸ்.ஜானகி பாடிய மிக இனிமையான பாடல்களில் ஒன்றாக இந்த பாடல் உள்ளது. ஹிட்ச்காக்கின் ‘வர்டிகோ’ படக்கதையை மகாபலிபுரத்து சிற்பங்களின் சரித்திரத்துடன் பிசைந்து, ‘கலங்கரை விளக்கம்’ என்ற குழப்பகரமான எம்.ஜி.ஆர். படம் 1965ல் வந்தது. அதில் இடம்பெற்ற பஞ்சுவின், ‘பொன்னெழில் பூத்தது புது வானில்’ என்ற பாடலின் இனிமையைக் குறித்து இன்று வரை எந்தக் குழப்பமும் இல்லை. இலக்கிய மணம், இனிமையான இசையிலும் குரல்களிலும் பெருகி ஓடும் போது யாருக்குத்தான் இன்பம் ஏற்படாது?
அதே ஆண்டான 1965ல் வெளிவந்த ‘கன்னித்தாய்’ படத்தில், எல்லாப் பாடல்களையும் பஞ்சு எழுதினார். சில பலித்தன...ஆனால் படத்தின் டைட்டிலில் பாடலாசிரியரின் பெயர் இல்லை. ‘தாயாக மாறவா தாலாட்டுப் பாடவா’ (‘ஏழைப்பங்காளன்’), ‘பூப்போல பூப்போல பிறக்கும்’ (‘நானும் ஒரு பெண்’) முதலிய சிறப்பான பாடல்களை பஞ்சு எழுதியிருந்தார். ஆனால், பாடல்கள் புனைவதை விட்டுவிட்டு, கதை, வசனம் எழுதுவதில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். இத்தனைக்கும், இளம் பருவத்தில் கேட்ட திரைப்பாடல்கள்தான், அவரை திரைத்துறைக்கு ஈர்க்க ஒரு காரணமாக இருந்தன. தான் பாடல் எழுதுவதைப் பின் தள்ளியதற்கு காரணம், கண்ணதாசனின் திறமை மீது ஏற்பட்ட பிரமிப்புத்தான் என்று கூறுவார் பஞ்சு.
அது உண்மையாக இருந்தாலும், தனக்குத் திரை உலகில் இடம் கொடுத்த கண்ணதாசனோடு போட்டிப்போட வேண்டுமா என்ற உணர்வும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம். ஏனென்றால், வாலி பிரகாசமாக வரத்தொடங்கியதும், கண்ணதாசனின் மகிமை குறையாமல் இருந்தாலும், அவருடைய வாய்ப்புகள் குறையத்தொடங்கி விட்டன.
பஞ்சு அருணாசலம் கதை, வசனகர்த்தாவாக தன்னை இனம் காட்டிக் கொள்ள எடுத்த முயற்சிகள், முதலில் அவ்வளவு எளிதாக ஈடேறவில்லை. பதினைந்து படங்கள் பாதியில் நின்றுபோய், அவருக்கு ‘பாதிக்கதை பஞ்சு’ என்றொரு பெயர் கூட வந்தது!
பல ஆண்டுகளுக்குப் பின், 1974ல் ‘கல்யாணமாம் கல்யாணம்’ என்று பஞ்சு மேளம் கொட்ட ஆரம்பித்தார். அதன் பிறகு, வானம் பிய்த்துக்கொண்டு வாய்ப்புகளைக் கொட்டியது.
‘கல்யாணமாம் கல்யாணம்’ படத்தில் நாட்டுப்புறக்குடுமிக்கும் (ஜெய்சங்கர்), நாகரிகக் கொண்டைக்கும் முடிச்சுப் போட்டு வேடிக்கைப் பார்த்த பஞ்சு, ‘உங்கள் விருப்ப’த்தில், ஜெய்சங்கரையும் தேங்காய் சீனிவாசனையும் காதல் கிளினிக் திறக்க வைத்தார்.
‘உன்னைத்தான் தம்பி’ (1974) என்ற படத்தில், ஊரை ஏய்த்து காசு பார்க்க நினைக்கும் இரு நண்பர்களில் ஒருவர் (ஜெய்சங்கர்) திருந்தும் போது ஏற்படும் விளைவுகளைச் சொன்னார். ‘ஊழல் வளர்ந்ததென்ன, ஊரை ஏய்த்துப் பிழைத்ததென்ன, வீட்டை வளர்த்ததென்ன, நாட்டை கெடுத்ததென்ன’ என்ற கண்ணதாசனின் வரிகள் காலத்தைப் பிரதிபலித்தன.
‘தொட்டதெல்லாம் பொன்னாகும்’ என்ற படத்தில், ‘மிஸ்ஸியம்மா’ கதையை ‘உல்டா’ செய்தார் பஞ்சு. ‘மிஸ்ஸியம்மா’வில், திருமணம் ஆகாதவர்கள், கணவன் – மனைவி என்ற பொய்யைச் சொல்லி வேலையில் சேர்கிறார்கள். பஞ்சுவின் கதையில், திருமணமானவர்கள் தொடர்பில்லாதவர்களைப்போல வேலை பார்க்கிறார்கள்!
‘மயங்குகிறாள் ஒரு மாது’ படத்தில், கல்லூரி நாட்களில் தவறு செய்துவிட்டு திருந்தும் ஒரு பெண்ணின் நிம்மதியான குடும்ப வாழ்க்கையைக் கெடுக்க வருகிறான், பழைய கதையை அறிந்த ஒரு கயவன். ‘சம்சாரம் என்பது வீணை’ என்ற வெற்றிப்பாடல் இடம்பெறும் இந்த படம் நல்ல தொழில்நுட்ப அம்சங்களுடன் விளங்கியது. கதாசிரியர் பஞ்சுவுடனான இயக்குநர் எஸ்.பி. முத்துராமனின் சிறந்த, நெடுங்கால கூட்டணிக்கு இந்த படம் அச்சாரமாக விளங்குகிறது. இப்படி அமைந்த இன்னொரு சிறந்த படம், ‘காலங்களில் அவள் வசந்தம்’.
கதை, வசனகர்த்தாவாக பஞ்சு அருணாசலம் தடம் பதிக்கத்தொடங்கிய படங்களுக்கு பெரும்பாலும் விஜயபாஸ்கர் இசை அமைத்திருந்தார். பாடல்களும் சிறப்பாக அமைந்து, படங்களின் வெற்றிக்குத் துணை புரிந்தன.
இந்த வகையில், தான் நெருக்கமாக அறிந்த ஜி.கே. வெங்கடேஷிடம் இசை உதவியாளராக இருந்த இளையராஜாவை, பஞ்சு அருணாசலம் ‘அன்னக்கிளி’யில் அறிமுகம் செய்ய நேர்ந்தது. இளையராஜாவின் நாட்டுப்புற மெட்டுக்களை மையமாக வைத்து கதை எழுதிய பஞ்சு, ‘அன்னக்கிளி’யின் வாயிலாக தமிழ்த் திரை இசையில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடக்கி வைத்துவிட்டார். பாடலாசிரியராகவும் பஞ்சு மீண்டும் வெற்றிக்கொடி நாட்டினார்.
இளையராஜாவின் அறிமுகம் பஞ்சுவிற்கும் ஒரு புதிய தெம்பை ஊட்டியது. ஏனென்றால், ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோரின் ஆரம்பகாலமாகவும் அது விளங்கியது. ரஜினியை வைத்து யதார்த்தமும் சோகமும் நிரம்பிய, ‘ஆறிலிருந்து அறுபதுவரை’ என்ற படத்தை எழுதித் தயாரித்தார் பஞ்சு. கமல்ஹாசன் இரட்டை வேடங்களில் நடித்த வெற்றிப்படமான ‘கல்யாணராம’னும் பஞ்சுவின் உருவாக்கம்தான். இத்தகைய படங்களின் வாயிலாக பஞ்சுவின் பி.ஏ.ஆர்ட் புரொடக்ஷ்ன்ஸ் ஒரு பிரபல தயாரிப்பு நிறுவனமாக முன்னணிக்கு வந்தது.
பஞ்சு அருணாசலத்தின் வாயிலாக தமிழ் சினிமாவிற்கு மாறுபட்ட கதை அமைப்புகள் கொண்ட பல படங்கள் கிடைத்தன. ‘புவனா ஒரு கேள்விக் குறி’, கதாநாயக நடிகனான சிவகுமாரை வில்லனாகவும், வில்லனாக நடித்து வந்த ரஜினியை ஹீரோவாகவும் சித்தரித்தது.
‘காயத்ரி’ மாறுபட்ட திகில் படமாக அமைந்தது. பஞ்சு எழுதித் தயாரித்த ‘எங்கேயோ கேட்ட குரல்’, ரஜினிகாந்த்தை யதார்த்தமான வேடத்தில் வித்தியாசமான கதை அமைப்பில் காட்டியது. பஞ்சுவிற்குள் இருந்த உயிரோட்டமான பாடல் இயற்றும் திறமை மீண்டும் வெளிக்கிளம்பியது. ‘விழியிலே மலர்ந்தது’, ‘ராஜா என்பார் மந்திரி என்பார்’ (‘பு. ஒரு. கேள்விக்குறி’), ‘குயிலே கவிக்குயிலே’, ‘சின்னக் கண்ணன் அழைக்கிறான்’ (‘கவிக்குயில்’), ‘வாழ்வே மாயமா’ (‘காயத்ரி’), ‘இதோ இதோ என் நெஞ்சிலே’ (‘வட்டத்துக்குள் சதுரம்’), ‘பருவமே புதிய பாடல் பாடு’ (‘நெஞ்சத்தை கிள்ளாதே’) என்று பஞ்சுவின் பாடல் வரிகள் நாடெங்கும் ஒலித்தன.
நிறுவனர் மெய்யப்பச் செட்டியார் மறைவிற்குப் பிறகு, ஏ.வி.எம். நிறுவனம் மீண்டும் தலைநிமிர்ந்தபோது, ‘முரட்டுக் காளை’, ‘சகலகலாவல்லவன்’, ‘பாயும் புலி’, ‘தூங்காதே தம்பி தூங்காதே’ போன்ற வெகுஜன படங்களின் வெற்றிக்கும் பஞ்சுவின் கதை, வசனம் வழி வகுத்தது. எத்தனையோ வித்தியாசமான கதைகளைக் கையாண்ட பஞ்சு, மசாலா படங்களுக்கான சரியான கலைவையையும் கைவசப் படுத்தியிருந்தார்!
பட இயக்குநர்கள் திட்டம் இல்லாமல் ஏகமாக காசையும் பிலிமையும் வீணடிக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டைக் கூறி, தானே இயக்குநராகி சில படங்கள் எடுத்தார் பஞ்சு. அவை ‘விலகியோடிய மேகங்கள்’. ஆனால் மீண்டும் அவர் தயாரிப்பாளராக களம் இறங்கிய போது, அவர் சொன்ன காரணத்தாலேயே கையை சுட்டுக்கொண்டார். படவுலகில் தொடர்ந்து நாற்பது வருடங்களுக்கு மேல் இயங்கியவர் மறைந்துவிட்டார். அவருடைய நான்கு மக்களில், சுப்பு திரை உலகில் பலவாறு சஞ்சரிப்பவர். தந்தையின் பி.ஏ.ஆர்ட்ஸை மீண்டும் நிமிர வைக்கவேண்டும் என்பது அவரது லட்சியம். ‘ஆகா வந்திருச்சு, ஆசையில் ஓடி வந்தேன்’ என்ற பல்லவியை நாம் மீண்டும் கேட்கக்கூடும்.
கங்கா யமுனா சரஸ்வதி..
நீங்கள் குளித்த மூன்று நதி
கடலினில் விழும்முன்
புனிதத்தை இழந்தது
காரணம் உங்கள் தீய மதி
ஆயிரம் கவிதைகள் பாடி - என்
அங்கங்களில் விளையாடி
தேய்கின்ற பிறையென மாற்றி
கற்பு தீபத்தை அணைத்தாய் நீரூற்றி
இல்லறம் என்றது நல்லறம் என்றிவள்
எண்ணியிருந்தது கண்ணியமற்றது
என்றாயே என் மன்னவா
இன்னொரு பெண்ணிடம் ஆசை வளர்த்தவன்
நல்லவன் போலொரு நாடகம் இட்டவன்
என் வாழ்வில் நீயல்லவா…என் வாழ்வில் நீயல்லவா
கங்கா யமுனா சரஸ்வதி நீங்கள் குளித்த மூன்று நதி
கடலினில் விழும்முன் புனிதத்தை இழந்தது
காரணம் உங்கள் தீய மதி
தாமரைப்பூவினை நாடி சொன்ன சத்திய வார்த்தைகள் கோடி
தாமரைப்பூவினை நாடி சொன்ன சத்திய வார்த்தைகள் கோடி
காமனைப்போல் உறவாடி இன்று கலங்க வைத்தாயே வாடி
ரம்பை திலோத்தமை ஊர்வசி என்றெனை நம்பவும் வைத்தனை
நன்றி இழந்தனை என் வாழ்வு சோகமன்றோ
நல்ல குலத்தினில் வந்து பிறந்தவள்
உன்னை நினைத்தவள் தன்னை மறந்தவள்
தெய்வீக ராகமன்றோ…தெய்வீக ராகமன்றோ
கங்கா யமுனா சரஸ்வதி நீங்கள் குளித்த மூன்று நதி
கடலினில் விழும்முன் புனிதத்தை இழந்தது
காரணம் உங்கள் தீய மதி
ஆலிலை மேகலைப்பாட்டு நான் ஆனந்தமடைந்தேன் கேட்டு
ஆலிலை மேகலைப்பாட்டு நான் ஆனந்தமடைந்தேன் கேட்டு
காலத்தில் அருந்திய விருந்து பின் கசந்ததுவோ சுகம் மறந்து
சொர்க்கம் இருப்பதை கண்டுபிடித்திட பக்கம் இருந்தொரு
பாடம் உரைத்தனை அப்போது அறிவில்லையே
அந்த சுகத்தினை நெஞ்சு நினைத்தது
வந்த இடத்தினில் கண்டுபிடித்தது
இப்போதும் விடவில்லையே…இப்போதும் விடவில்லையே
கங்கா யமுனா சரஸ்வதி நீங்கள் குளித்த மூன்று நதி
கடலினில் விழும்முன் புனிதத்தை இழந்தது
காரணம் உங்கள் தீய மதி
சிரிப்பு நடிகர்கள் வந்தார்கள் போனார்கள்; சிரித்துக்கொண்டே இருந்தார் ஏ.வீரப்பன்!
ஒவ்வொரு காலத்திலும் சினிமாவில் சில சிரிப்பு நடிகர்களின் காட்டிலே மழை பெய்வது வழக்கம். ஒரு காலகட்டத்தில் என்.எஸ்.கிருஷ்ணன் கொடி கட்டிப்பறந்தார். பிறகு ஏ.கருணாநிதியும் தங்கவேலுவும் சந்திரபாபுவும் வலம் வந்தார்கள்.
எல்லோரையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு, தலைமை பீடத்தில் அமர்ந்தார் நாகேஷ். அரசியல் அதிர்வேட்டுகளை ஹாஸ்யம் ஆக்கினார் சோ. தேங்காய் சீனிவாசன், சுருளிராஜன், கவுண்டமணி, செந்தில், ஜனகராஜ், விவேக், வடிவேலு என்று காலத்திற்கு காலம், முன்னணி சிரிப்பு நடிகர்கள் மாறுபட்டார்கள்.
இப்படி ஊர்வலம்போன நகைச்சுவை நட்சத்திரங்களுக்கு இடையே, நாகேஷ் காலம் தொடங்கி நாற்பது வருடங்களுக்கு மேல் காமெடி ‘டிராக்’ எழுதி பல சிரிப்பு நடிகர்களுக்கு அஸ்திவாரமாக இருந்தவர் ஒரே ஒருவர் -- ஏ.வீரப்பன்.
நாடகத்துறையில் புடம்போடப்பட்ட நடிகரான வீரப்பன், யதார்த்தமான, அளவான நடிப்பை காட்டக்கூடியவர். சிரிப்பு நடிகராகவும் சில படங்களில் கவனத்தைக் கவர்ந்தவர் (உதாரணமாக, யார் நீ).
பொதுவாக, இரட்டை அர்த்தம், ஆபாசம் என்பதையெல்லாம் தவிர்த்து, பல படங்களில் வீரப்பன் நகைச்சுவை காட்சிகள் எழுதினார். சிரிப்புடன் சிந்தனையைத் தூண்டக்கூடியவர் என்ற பெயர் அவருக்கு வந்தது. சின்ன கலைவாணர் என்றுகூட ஒரு சிலர் புகழ்ந்தார்கள்.
'ஞான பீடம்' வென்ற ஜெயகாந்தன் முதல், ஞானம் என்ன விலை என்றுகேட்கும் பாமரன் வரை பலரையும் கவர்ந்த வீரப்பன், பள்ளியில் ஆனா ஆவன்னா கூட படிக்காதவர்!
தஞ்சை மாவட்டத்தில் ஆவணம் என்ற கிராமத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்தார். பிறந்த தேதி 28.6.1934. ‘நான் வளர்ந்த காலத்திலே கிராமத்தில ஒன்றுமே இல்லை’ என்பார் வீரப்பன். பள்ளிக்குப் போகவேண்டிய கஷ்டமெல்லாம் அவருக்கு ஏற்படவில்லை.
ராமநாத தேவர் என்ற ஊர்க்காரர், ஒரு நாள் கிராமபோன் கருவி வாங்கிக்கொண்டு வந்தார். 'மீரா' படத்திற்காக எம்.எஸ். சுப்புலட்சுமி பாடிய ‘காற்றினிலே வரும் கீதம்’ பாடலின் இனிய சுரங்கள், கிராமபோன் கூம்பிலிருந்து ஆவணம் கிராமத்தின் காற்றில் கலந்தன. ஊர்க்காரர்களுக்கு அதிசயமாக இருந்தது.
வயற்காட்டின் ஓரம் ஒரு சின்ன குடிசை அமைக்கப்பட்டு அதில் அமர்ந்து பயிரைக் காத்துக்கொண்டிருந்தார் வீரப்பன். அப்போது கிராமபோன் இசைத்தட்டில் கேட்ட சுப்புலட்சுமியின் பாட்டு அவர் தொண்டையிலிருந்து வெளிப்படத் தொடங்கியது.
சின்னப் பையன்களின் குரலினிமையுடன் பாடலின் இயல்பான இனிமையும் சேர்ந்திருந்தது. அந்த வழியாக பைக்கில் சென்ற ஒருவர் வாகனத்தை நிறுத்திவிட்டுப் பாடலைக் கேட்டிருக்கிறார். வீரப்பனின் பாடல் நின்றவுடன், ‘இன்னொரு முறை பாடப்பா’ என்று கேட்டார் பைக்கானந்தர்! இரண்டாவது முறை பாடலைக் கேட்டுவிட்டு அவர் வெறுமனே செல்லவில்லை.
வயக்காட்டைப் பார்த்துக்கொள்வதும் ஆடுமாடுகளை மேய்ப்பதுமாக இருந்த வீரப்பன், மாயவரம் ராஜகோபால் என்பவரிடம் சங்கீதம் பயின்றார். அதைப் பின்னாளில், ‘சாதாரணப் பாட்டு’ கத்துக்கிட்டேன் என்பார் வீரப்பன்.
புதுக்கோட்டையில் டி.கே.கிருஷ்ணசாமி, சின்னஞ்சிறார்களை வைத்து சக்தி நாடக சபை தொடங்கிய நேரம் அது. ராமாயண நாடகத்தில் ராமராகப் பாடி நடிக்கக்கூடிய பையனைத் தேடிக்கொண்டிருந்தார். புதுக்கோட்டையிலிருந்து ஆவணம் 25 மைல் தூரம். ஆனால் வயக்காட்டோரம் அழகாகப்பாடும் ஆவணம் பையனைப் பற்றிய செய்தி புதுக்கோட்டைக்குப் பரவிவிட்டது!
அம்மா அப்பாவிடம் சொல்லிக்கூப்பிட்டா, ‘‘நாங்க நாடகம், சினிமாவுக்கெல்லாம் பையனை அனுப்பமாட்டோம்’’ என்று, வள்ளியம்மைக்கும் சேர்த்து கூறிவிட்டார் அரியகுட்டித்தேவர்.
ஆனால், ‘நாலு பையங்கள்ள ஒருத்தன் இதுல இருக்கட்டுமே’’ என்று மாமா ராமநாத தேவரும் பழனியப்பச் செட்டியாரும் சிபாரிசு செய்தது பலன் அளித்தது.
சக்தி நாடக சபையின் முதல் நாடகத்தில் கதாநாயகன் ராமன் வேடம் வீரப்பனுக்கு கிடைத்தது. வீரப்பன் பாடக்கேட்டு பிரதான வேடத்திற்கு சிபாரிசு செய்தவர்கள் நாடக சபையில் அப்போது இருந்த எஸ்.வி.சுப்பையாவும் எம்.என்.நம்பியாரும். பாட்டும் நடிப்பும் மட்டும் இல்லை, தமிழும் பேச்சும் வீரப்பனுக்கு சொல்லிக் கொடுக்கப்பட்டது. அதற்கு வாத்தியார் எஸ். ஏ. கண்ணன்.
சிவாஜி என்று பிறகு புகழ் பெற்ற வி.சி.கணேசனும் சக்தி நாடக சபையில் வந்து சேர்ந்தார். கணேசனின் நடிப்பு வீரப்பனுக்கு முன் மாதிரியாக அமைந்தது. 'பராசக்தி' படத்தில் சிவாஜி நடித்துக் கொண்டிருந்த போது, ‘என் தங்கை’ நாடகத்தில் சிவாஜி நடித்த வேடத்தில் வீரப்பன் நடித்தார். படப்பிடிப்பு இல்லாத நாளில் நாடகம் பார்கக வந்த கணேசன், வீரப்பன் நடிப்பை பாராட்டினார்.
சென்னை ஒற்றை வாடை அரங்கில் சக்தி நாடக சபை 1947 ஆகஸ்டில் நாடகம் போட்ட போது, எம்.ஜி.ஆர் வந்து நாடகம் பார்த்தார். வீரப்பனுக்கு பாதாம் அல்வா வாங்கிக்கொடுத்து, அதை சாப்பிட்டுவிட்டு பாடச்சொன்னார். பாதாம் அல்வா குரலை இனிமையாக ஒலிக்கச் செய்ததை கண்டுகொண்டார் வீரப்பன்.
சக்தி நாடக சபையில் பத்து வருடம் இருந்த பிறகு, 1954ல் எஸ்.வி.சகஸ்ரநாமத்தின் சேவா ஸ்டேஜ் குழுவில் சேர்ந்தார் வீரப்பன். சேவா ஸ்டேஜுக்கு நாடகம் எழுதிய பி.எஸ்.ராமையா, தி. ஜானகிராமன் போன்ற இலக்கியவாதிகளின் தொடர்பு வீரப்பனுக்கு கிடைத்தது. தான் எழுதிய வசனங்களில் நடிகர்கள் கூட்டிக்குறைத்துப் பேசுவதை ஜானகிராமன் விரும்பமாட்டார். ஆனால் காட்சிக்கு ஏற்ப பேசிய வீரப்பனுக்கு மட்டும் அந்த விஷயத்தில் சலுகை அளித்திருந்தார் ஜானகிராமன்!
சேவா ஸ்டேஜ் கல்கத்தாவில் நாடகம் நடிக்கச் சென்ற போது, வங்காளி மொழி நாடகம் பார்க்க வீரப்பன் சென்றார். ஒரு நாடகம் 514வது நாளாக நடந்துகொண்டிருந்ததைப் பார்த்து அதிசயித்தார். திருப்தி மித்ரா என்ற பெண்மணி சிரித்துக்கொண்டே அழுத காட்சி வீரப்பனை அழவைத்தது. அப்படி ஒரு நடிப்பாற்றல் திருப்திக்கு.
அதே போல் கப் அண்ட் சாஸரில் ஒரு நடிகர் காபி குடித்த காட்சி. காபியில் மிதந்துகொண்டிருந்த எறும்பை ஸ்பூனில் எடுத்துபோட்டுவிட்டுக் காபியைக் குடித்தார் நடிகர். இதை 514வது தடவையாக இன்று செய்கிறார், இனியும் வரவிருக்கும் நாட்களிலும் செய்வார் என்று, கூட வந்த நண்பர் வீரப்பனிடம் தெரிவித்தார். பிறகு கல்கத்தாவிலிருந்து வீரப்பனுக்கு கடிதம் போட்ட அந்த நண்பர், அந்த நாடகம் ஆயிரமாவது முறையைக் கடந்து கொண்டிருக்கிறது என்றார்.
இதுபோன்ற அனுபவங்கள், வீரப்பனிடம் கலையின் மீது ஒரு அர்ப்பண உணர்வை வளர்த்துவிட்டன. ‘‘சாகும் வரை என் உழைப்பை கலைக்காகவும் கலையின் மூலம் மக்களைத் திருத்துவதற்காகவும் செலவிடுவது என்று நான் அந்த வங்காளி நாடகத்தைப் பார்த்து முடிவுசெய்துவிட்டேன்,’’ என்பார் வீரப்பன்.
‘மல்லியம் மங்கலம்’, ‘நாலு வேலி நிலம்’ முதலிய சேவா ஸ்டேஜ் நாடகங்கள் திரைவடிவம் பெற்றபோது, நாடகத்தில் ஏற்ற அதே வேடங்களை திரையிலும் செய்தார் வீரப்பன். 'நாலு வேலி நில'த்தில் நல்லவன் போல் நடித்துக் கெடுக்கும் அவருடைய வேடம் அமர்க்களமாக இருந்தது. இன்றும் டி.வி.டி.யில் மக்கள் பார்த்து ரசிக்கலாம்.
'பணத்தோட்ட'த்தில் நடிக்க வீரப்பனை எம்.ஜி.ஆர். அழைத்தார். வீரப்பன் நாகேஷையும் அழைத்துச் சென்று அறிமுகப் படுத்தினார். பின்னர் இருவருக்குமான சிரிப்புப் பகுதியை சிருஷ்டித்தார். வெறும் கோமாளித்தனமான இந்த ‘ஸ்லாப்ஸ்டிக்’ காமெடி, வரவேற்பை பெற்றது. இந்த வெற்றி, நாகேஷுக்கு எம்.ஜி.ஆருடனான ஒரு நீண்ட அத்தியாயத்தைத் தொடக்கி வைத்தது.
'படகோட்டி'யில் வீரப்பனும் நாகேஷும் நடித்த ஒரு காட்சியில் அவர்கள் இருவரும் படகில் இருந்தார்கள். நாகேஷ் தண்ணீரில் விழுவதுபோல் காட்சி அமைக்கப்பட்டிருந்தது.
அவர் விழுந்தவுடனே, ‘அடுத்த தலைவர் நான்தான்’ என்று வீரப்பன் ஒரு நொடியில் ஒரு சிரிப்பு வெடியைக் கொளுத்திப்போட்டார் (படத்தில், ‘நடமாடும் வலைவீசுவோர் சங்க’த்திற்கு நாகேஷ் தலைவர், வீரப்பன் செயலாளர்).
கரையிலிருந்து படப்பிடிப்பை கவனித்துக்கொண்டிருந்த எம்.ஜி.ஆர், வீரப்பன் சொன்னதைக் கேட்டு சத்தமாக சிரித்தார். கரைக்குப் படகு வந்தவுடன், ‘வீரப்பா, நாட்டில நடக்கற விஷயத்தை ஒரு டயலாக்கில சொல்லிட்டியே’ என்று கூறி, ஐயாயிரம் ரூபாய் கட்டை வீரப்பனுக்குப் பரிசாகக் கொடுத்தார்!
‘மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி’ செல்லும் பஸ்ஸில் கயவர்களிடமிருந்து தப்பி வரும் ஒரு பெண் (கல்பனா), ஏறுவதாக கதை அமைத்து, வசனம் எழுதினார் வீரப்பன். படம் வெற்றி அடைந்து, ‘பாம்பே டூ கோவா’ என்று இந்தியிலும் சக்கை போடு போட்டது.
அதே போல், ‘சாது மிரண்டால்’ படத்திற்கு கதை வசனம் எழுதினார் வீரப்பன். வங்கிக் காஷியராக இருக்கும் சாதுவான பசுபதி (டி.ஆர். ராமசந்திரன்), பால்ய நண்பனும் கொள்ளைக் காரனுமான நரசிம்மனை (ஓ.ஏ.கே. தேவர்) சந்திக்கும்போது விபரீதங்கள் நடக்கின்றன என்பது கதை. இந்தப் படமும் அதன் இந்திப் பதிப்பான 'சாது அவுர் சை'த்தானும் வெற்றி அடைந்தன.
ஆனால் இரண்டு படங்களின் வெற்றிக்கான பலன்கள் வீரப்பனுக்கு கிடைக்கவில்லை. ஏனென்றால், தான் கதை, வசனம் எழுதியிருந்தாலும் தன்னுடைய பெயரை வீரப்பன் போட்டுக் கொள்ளவில்லை!
மக்களுக்குத் தேவைப்படக்கூடிய கருத்துக்களை ஹாஸ்யமாக எப்படி அமைக்கலாம் என்ற சிந்தனையில் எப்பொழுதும் இருந்த வீரப்பனுக்கு, கடவுளைப் பற்றி எல்லாம் நினைக்க நேரம் இல்லை. ஆனால் கடவுளுக்கும் மனிதனுக்கும் உள்ள உறவை குறித்து 'ருத்ரதாண்டவம்' என்ற நாடகத்தில் அவர் எழுதினார். அது திரைப்படமாகவும் வந்தது. அதில் தேச ஒருமைப்பாடடின் அவசியத்தை மசால் வடையை முன் வைத்து அவர் எல்லோருக்கும் புரியும்படி சொன்னது மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
கவுண்டமணிக்கும் செந்திலுக்கும் இடையேயான வீரப்பனின் வாழைப்பழக் காமெடி, 'கரகாட்டக்கார'னில் அமைந்தது. ஒரு வாழைப்பழத்தை தான் சாப்பிட்டு விட்டு, இரண்டு வாழைப்பழங்களுக்கு கணக்குச் சொல்லும் செந்திலின் ஏமாற்றுவேலை, பரவலாக ரசிக்கப்பட்டது. கங்கை அமரன் இயக்கிய படங்களில் உடன் இருந்து உதவினார் வீரப்பன்.
மதர்லேண்ட் பிக்சர்ஸ் எடுத்த ‘நான் பாடும் பாடல்’, ‘உன்னை நான் சந்தித்தேன்’, ‘உதய கீதம்’, ‘இதயக்கோயில்’ முதலிய படங்களில் கவுண்டமணிக்காக எழுதினார் வீரப்பன். ஆனால், இந்தத் தலையா அந்த தலையா என்று கவுண்டமணி பேசுவதும் செந்திலை உதைப்பதும் வீரப்பனின் கற்பனை அல்ல... கவுண்டமணியின் சொந்த சரக்கு.
‘கோயில் புறா’வில், தானும் உசிலை மணியும் பங்குபெற்ற ஒரு அருமையான ஹாஸ்ய பகுதியை உருவாக்கினார் வீரப்பன். 'சொல்லத்தான் நினைக்கிறேன்' படத்தில் வீரப்பனை ஒரு நல்ல பாத்திரத்தில் கே.பாலசந்தர் மிளிர வைத்தார்.
சிவாஜி நடித்த 'ரோஜாவின் ராஜா'விற்கு கதை, வசனம் எழுதிய வீரப்பன், 'தெய்வீக ராகங்கள்' என்ற படத்தை தானே திரைக்கதை, வசனம் எழுதி இயக்கவும் செய்தார்.
காசு சேர்க்கும் பழக்கம் இல்லாதவர் வீரப்பன். சினிமா உலக பந்தாக்கள் சிறுதும் இல்லாத எளிமையான மனிதராக வாழ்ந்தார். அறுபத்தி ஐந்து வயதில் அவருக்கு கண்பார்வை பாதிக்கப்பட்டது. அப்பொழுதும் அவரிடம் வந்து சினிமாக்காரர்கள் காமெடி டிராக் எழுதிக்கொண்டுபோனார்கள். தொடர்ந்து சினிமாவிற்காக உழைத்து கொண்டிருந்த வீரப்பனின் உழைப்புக்கு ஏற்ற கவுரவத்தையோ சன்மானத்தையோ திரை உலகத்தினர் அவருக்குத் தரவேயில்லை. அதைப் பற்றி வீரப்பனும் கவலைப்படவேயில்லை!
வீரப்பன் 30.8.2005ல் மறைந்த போது, அவரைப்போலவே பாய்ஸ் கம்பெனியில் சேர்ந்து சிரிப்பு நடிகராக வளர்ந்த பி.ஆர்.துரை, வீரப்பனுக்கு அஞ்சலி கூட்டம் நடத்தினார். அதில் வீரப்பனின் இளமைக்கால நண்பரான ஜெயகாந்தன், அவருடைய உன்னதமான பண்புகளைப் பாராடடிப்பேசினார். ஏ.வீரப்பன், தன் செயலாலும் சிந்தனையாலும் உழைப்பாலும் ஏ.ஒன்.வீரப்பன்தான்.
மண்குடிசை வாசலென்றால் தென்றல் வர வெறுத்திடுமா ?
மாலைநிலா ஏழையென்றால் வெளிச்சம் தர மறுத்திடுமா ?...
உனக்காக ஒன்று எனக்காக ஒன்று
ஒரு போதும் தெய்வம் கொடுத்ததில்லை !...
கொடுத்ததெல்லாம் கொடுத்தான்
அவன் யாருக்காக கொடுத்தான் ?...
ஒருத்தருக்கா கொடுத்தான்
இல்லை ஊருக்காக கொடுத்தான்
A young, innocent man, Baskaran (S. S. Rajendran) lives alone with his elderly parents Ponnambla Mudaliar (V. K. Ramasamy), Vadivu (G. Varalakshmi) and his cousin Kuzhandai Velu (K. A. Thangavelu). The elderly couple wishes for an arranged marriage for their family friend Shanmuga Mudaliar (P. D. Sambantham) and daughter Baby (G. Sakunthala). So, Baskar and his cousin visit Neelagiri for Shanmuga Mudaliar's home. On the way, their car was struggling, so Thangavelu such as water, meantime, Baskar drives the car and has an accident. A young village girl Ponni (Padmini) saves him and she gives aid for his injured body.
Then both fall in love with each other. Meanwhile, Kuzhandai Velu reaches Shanmuga Mudaliar's home, meets him and his daughter Baby. Baby and Kuzhandai fall in love. And after searching for Baskar, finally he finds him. Then, Kuzhandai was received at home with Baskar. Baskar ever time was spelled for Kattu Roja. So, his parents and cousin decided he was mentally disturbed. In the meantime, Somu (R. S. Manohar) reached Ponni's home. Ponni's father (T. S. Muthaiah) was dying in bed, her father was to bring Ponni for his Uncle Somu's hand.
Then, there was comes to Ponnamblam house and Ponni joins for house maid. In the meantime, the household faces some problems for son shapes. Accidentally, Baskar and Ponni meet again. Since, he was disturbed for heartly. Baskar was, in the meantime, closed relationship with his Uncle Thanga Durai (M. R. Radha), wish like his sister Pushpa (Pusphalatha) gets married Baskar, So he hatches a secret plan for this. Baskar goes to the wrong pathway and becomes an alcoholic. His mother worries about her son's attitude and once Baskar tries to molest Ponni.
Then Vadivu decided to arrange a marriage of Ponni and Somu. Ponni tries to commit suicide, Baskar saved her life at a mountain edge. Somu knew Ponni's past life. Baskar is her past lover. Finally, Baskar and Ponni get married, but Thanga Durai stopped the ceremonies. Because, he told Baskar secretly married his sister Pushpa and their couple has one female child. The baby is also identified, but who is the father? In the meantime, Kuzhandi Velu says in truth the baby is Thanga Durai's child. He was spoiled Ponni's sister's (B. S. Saroja) life, so she leaves the child in Baskar's car and Baskar submits the baby to Thanga Durai. Thanga Durai was trained to baby for shows Baskar and Pushpa photograph and teach the child for father and mother identifications. Finally Thanga Durai admits his mistake and reunites with his family and Pushpa marries Somu.