Tuesday, February 28, 2017

JANANI JANANI - THAI MOOKAMBIGAI




படம்: தாய் மூகாம்பிகை
இசை: இளையராஜா
குரல்: இளையராஜா
பாடல்: வாலி

(ஆதி சங்கரரின் சௌந்தர்ய லஹரியில் வரும் முதல் ஸ்லோகம் இது)

சிவ சக்த்யா யுக்தோ யதி பவதி சக்த: ப்ரபவிதும் ந சேதேவம் தேவோ ந கலு குசல ஸ்பந்திதுமபி அத ஸ்த்வாம் ஆராத்யாம் ஹரிஹர விரிஞ்சாதிபிர் அபி பிரணந்தும் ஸ்தோதும் வா கதம் அக்ருத புண்ய: ப்ரபவதி ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ  ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ ஜகத்காரணி நீ பரிபூரணி நீ  ஜகத்காரணி நீ பரிபூரணி நீ ஜகத்காரணி நீ பரிபூரணி நீ  ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ ஜனனி ஜனனி ஜனனி ஜனனி ஒரு மான் மழுவும் சிறு கூன் பிறையும் சடை வார் குழலும் விடை வாகனமும் சடை வார் குழலும் விடை வாகனமும் கொண்ட நாயகனின் குளிர் தேகத்திலே நின்ற நாயகியே இட பாகத்திலே நின்ற நாயகியே இட பாகத்திலே ஜகன் மோஹினி நீ சிம்ம வாஹினி நீ ஜகன் மோஹினி நீ சிம்ம வாஹினி நீ ஜகன் மோஹினி நீ சிம்ம வாஹினி நீ ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ ஜகத்காரணி நீ பரிபூரணி நீ சதுர் வேதங்களும் பஞ்ச பூதங்களும் ஷண்மார்க்கங்களும் சப்த தீர்த்தங்களும் ஷண்மார்க்கங்களும் சப்த தீர்த்தங்களும் அஷ்ட யோகங்களும் நவ யாகங்களும் தொழும் பூங்கழலே மலை மாமகளே தொழும் பூங்கழலே மலை மாமகளே அலைமாமகள் நீ கலைமாமகள் நீ அலைமாமகள் நீ கலைமாமகள் நீ அலைமாமகள் நீ கலைமாமகள் நீ ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ ஜகத்காரணி நீ பரிபூரணி நீ ஸ்வர்ண ரேகையுடன் ஸ்வயமாகி வந்த லிங்க ரூபிணியே மூகாம்பிகையே லிங்க ரூபிணியே மூகாம்பிகையே ஸ்வர்ண ரேகையுடன் ஸ்வயமாகி வந்த லிங்க ரூபிணியே மூகாம்பிகையே லிங்க ரூபிணியே மூகாம்பிகையே பல தோத்திரங்கள் தர்ம சாத்திரங்கள் பணிந்தேத்துவதுன் மணி நேத்திரங்கள் பணிந்தேத்துவதுன் மணி நேத்திரங்கள் சக்தி பீடமும் நீ ... சக்தி பீடமும் நீ ஸர்வ மோக்ஷமும் நீ சக்தி பீடமும் நீ ஸர்வ மோக்ஷமும் நீ சக்தி பீடமும் நீ ஸர்வ மோக்ஷமும் நீ சக்தி பீடமும் நீ ஸர்வ மோக்ஷமும் நீ சக்தி பீடமும் நீ ஸர்வ மோக்ஷமும் நீ ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
ஜகத்காரணி நீ பரிபூரணி நீ  ஜகத்காரணி நீ பரிபூரணி நீ

ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ ஜனனி ஜனனி ஜனனி ஜனனி  ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ..

இளையராஜா ஒரு நிகழ்ச்சியில் சொன்னது:


டைரக்டர் கே. ஷங்கர் என்னிடம் ”தாய்மூகாம்பிகை” படத்திற்கென ஒரு சிச்சுவேஷன் சொல்லியிருந்தார்.  அந்த சமயங்களில் இரவு இரண்டு மணிவரை எனக்கு கம்போஸிங் இருக்கும்.  மீண்டும் காலையில் ரெக்கார்டிங் இருக்கும். இவர்களுக்கு கம்போஸிங்கிற்காக எனக்கு நேரம் ஒதுக்க இயலாமல் இருந்தது. அந்த சமயத்தில் நான் ‘நார்த் உஸ்மான் ரோட்டில்’ ஒரு வாடகை வீட்டில் இருந்தேன். 

அடுத்த நாள் பூஜை..!  பாட்டு இன்னும் தயாராகவில்லையே என்று டைரக்டர் பதறத் துவங்கிவிட்டிருந்தார்.  நான் அவரிடம் ‘பதறத் தேவையில்லை.  இரவு வீட்டிற்கு வாருங்கள்.. அங்கேயே கம்போஸிங் வைத்துக்கொள்ளலாம்’ என்று கூறினேன்.  

‘ஆதிசங்கரர் மூகாம்பிகையை பிரதிஷ்டை செய்கிறார்.  அவர் தியானத்தில் சர்வ சக்திகளும் ஐக்கியமாக அவருக்குக் காட்சியளிப்பதைப் போன்ற’ காட்சி என்று எனக்கு முதலிலேயே சிச்சுவேஷனைச் சொல்லியிருந்தனர்.  இரவு அனைவரும் வந்துவிட்டனர்.  நான் குளித்துவிட்டு, பூஜை அறையைக் கடந்தபோது ஆதிசங்கரரின் படம் என் கண்களில் பட்டது.  நான் நின்று, ”குருவே..! நீங்க என் பாட்டுல வர்றீங்க..” என்று சொல்லிவிட்டு வந்துவிட்டேன்.  என் பக்தி அவ்வளவுதான்.

உள்ளே சென்றால் வாலி சார், டைரக்டர், தபலா கன்னையா அண்ணன், என அனைவரும் வந்தமர்ந்திருந்தனர்.  மீண்டும் சிச்சுவேஷனைச் சொன்னார்கள். வாலி சாரும் கேட்டுக்கொண்டார்.  கேட்டவுடன் கம்போஸிங் துவக்கினேன். முழுவதும் முடித்துவிட்டேன்.  டைரக்டருக்கும் பிடித்துவிட்டது.  வாலி பாடலை எழுதத் துவங்கிவிட்டிருந்தார். பல்லவி எழுதி முடித்தார்.  அனைவரும் காபி சாப்பிடக் கலைந்தனர்.  நானும் எழுந்தேன்.  வெளியே வந்து யோசித்தால், ”ஆதிசங்கரர் யார்..? எல்லாவற்றையும் துறந்தவர் அல்லவா? அந்தத் துறவறம் இந்தப் பாடலில் தெரிகிறதா? எல்லாவற்றையும் விட்டுவிட்டுப்போன அந்த Detachment தெரிகிறதா? Tune சரியாக இருக்கிறது.  ஒரு ராகத்தில் சிறப்பாய் இருக்கிறது.  ஆனால் இந்தப் பாடல் ஆதி சங்கரர் பாடுவது போலவே இல்லையே..? ஒரு சங்கீத வித்வான் பாடுவதுபோலல்லவா இருக்கிறது. திருப்தியாக இல்லையே..!” என்று எனக்குத் தோன்றியது. 

நான் மறுபடியும் சென்று, ‘சார்.. ஓ.கே. பண்ணிட்டீங்க.  ஆனால் நான் வேறொன்று செய்து தருகிறேன்’ என்றேன்.  அதற்குள் பாடகர் யேசுதாஸை பாடலைப் பாடவைப்பதற்காக யோசித்துக்கொண்டிருந்தனர்.  மறுபடியும் உட்கார்ந்தோம். உட்கார்ந்து துவக்கினால்… ’தரரா.. தரரா… (ஜனனி ஜனனி பாடலின் மெட்டைப் பாடிக்காட்டுகிறார்) என்று முடித்தேன்.  வாலி சார், ‘ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ; ஜகத்தாரணி நீ பரிபூரணி நீ” என்று எழுதினார். 

பாடலை முழுவதும் பாடி முடித்தால், கதாசிரியர், அஸிஸ்டண்ட் டைரக்டர்ஸ் அனைவரின் கண்களும் கலங்கியிருந்தன.  ‘பாடல் ரொம்பப் பிரமாதமாக வந்திருக்கிறது சார்..!’ என்றார்கள். அனைவருக்கும் மிகவும் பிடித்திருந்தது.

கம்போஸிங் முடிந்து .. அனைவரும் கலைந்து சென்றனர்.  நான் எழுந்தேன். ‘குருவே.. என் Tune’ல் நீங்கள் வந்தீர்கள் என்று எப்படி நான் அறிந்துகொள்வது.?’ என்று மனதுக்குள் நினைத்தேன்.  அப்போது அங்கு ஓடிக்கொண்டிருந்த மின்விசிறியின் காற்றில் மிதந்துவந்த காகிதம் ஒன்று என் கையில் அமர்ந்தது. அதை விரித்தால், ‘பஜகோவிந்தம்.. பஜகோவிந்தம்.. பஜகோவிந்தம்.. பஜகோவிந்தம்..’ என்று இருந்தது.  பாடத்துவங்கினேன்.

‘பஜகோவிந்தம்.. பஜகோவிந்தம்..
பஜகோவிந்தம்.. பஜகோவிந்தம்..’


’ஜனனி ஜனனி’ பாடல்.. ‘பஜகோவிந்தம்’ Meter'ல் அமைந்திருந்தது.  ‘அடடே.. குருவே...!! இப்படித்தான் என் பாடலில் வந்தீர்களா..?’ என்று எனக்குச் சொல்லமுடியாத சந்தோஷம்.


அடுத்த நாள் ரெக்கார்டிங்.  யேசுதாஸ் ஊரில் இல்லை. டைரக்டர், ’யேசுதாஸ் பாடினால்தான் நன்றாக இருக்கும்’ என்று கூறினார்.  நான் டைரக்டரிடம், ‘நான் பாடுகிறேன்.  ரெக்கார்டிங் செய்துவிடுவோம்.  அதன்பின்னர் யேசுதாஸ் வந்தவுடன் அவரைப் பாடவைத்து மிக்ஸ் செய்துகொள்ளலாம்’ என்று கூறினேன்.  அந்த இடத்தில் வேறு வழியில்லாததால் நானே பாடிவிட்டேன். 

Friday, February 24, 2017

ORU NADHI - SAMURAI

 
 
படம்: சாமுராய்
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
குரல்: நித்யஸ்ரீ, துஷாரா
பாடல்: வைரமுத்து

ஒரு நதி ஒரு பௌர்ணமி
ஓர் ஓடம் என்னிடமுண்டு
ஓடக்காரன் ஓடக்காரன்
அட உங்களில் யாருண்டு

ஒரு காடு சிறு மேடு
சில பூக்கள் என்னிடமுண்டு
பூக்காரன் பூக்காரன்
அட உங்களில் யாருண்டு

ஒரு புதையல் பொற்குவியல்
மலைவாசல் என்னிடமுண்டு
அலிபாபா அலிபாபா
அட உங்களில் யாருண்டு...

ஒரு நதி ஒரு பௌர்ணமி ஓர் ஓடம்..
ஒரு புதையல் பொற்குவியல் மலைவாசல்..

பாராமல் போன பௌர்ணமி எல்லாம்
பறித்துக் கொடுக்கும் ஒருவன்
கேளாமல் போன பாடலை எல்லாம்
திரட்டிக் கொடுக்கும் ஒருவன்

நான்தானா?.... நீயில்லை..
நான்தானா?.... நீயில்லை..

வான்மழையில் நனைந்த வானவில்லை
என் மடியில் கட்டும் ஒருவன்
என் தேகக் கதவு ஜன்னல் எல்லாம்
திறந்து வைக்கும் ஒருவன்

நான்தானா?.... நீயில்லை..

என் தேடல் அது வேறு
அடப்  போடா நீயில்லை..

ஒரு நதி ஒரு பௌர்ணமி
ஓர் ஓடம் என்னிடமுண்டு
ஓடக்காரன் ஓடக்காரன்
அட உங்களில் யாருண்டு

ஒரு காடு சிறு மேடு
சில பூக்கள் என்னிடமுண்டு
பூக்காரன் பூக்காரன்
அட உங்களில் யாருண்டு


தீராமல் போன ஆசைகள் எல்லாம்
தீர்க்கத் தெரிந்த ஒருவன்
போகாத எல்லை போய் வந்தாலும்
புன்னகை செய்யும் ஒருவன்..

புன்னகை செய்யும் ஒருவன்.. ஆ ஆ

தீராமல் போன ஆசைகள் எல்லாம்
தீர்க்கத் தெரிந்த ஒருவன்
போகாத எல்லை போய் வந்தாலும்
புன்னகை செய்யும் ஒருவன்..

நீதானா ?... நானில்லை..
நீதானா ?.. நான் நான்  நானில்லை..

ஒரு கற்பு கன்னிமை கருமம்  எல்லாம் 
கண்டு கொள்ளாத ஒருவன் 
நான் போதும் போதும் என்னும் வரையில் 
புதுமை செய்யும் ஒருவன்..

நீதானா ?... ஐயோ நானில்லை..

நான் தேடும் ஸ்ருங்காரம் 
இங்கு ஏனோ ஏனில்லை ...

ஒரு நதி ஒரு பௌர்ணமி
ஓர் ஓடம் என்னிடமுண்டு
ஓடக்காரன் ஓடக்காரன்
அட உங்களில் யாருண்டு

ஒரு காடு சிறு மேடு
சில பூக்கள் என்னிடமுண்டு
பூக்காரன் பூக்காரன்
அட உங்களில் யாருண்டு

ஒரு புதையல் பொற்குவியல்
மலைவாசல் என்னிடமுண்டு
அலிபாபா அலிபாபா
அட உங்களில் யாருண்டு...

எங்களில் யாருண்டு...

ஹ்ம்ம்...ஹ்ம்ம்

ஒரு நதி ஒரு பௌர்ணமி

ஒரு நதி ஒரு பௌர்ணமி

ஒரு நதி.


















Wednesday, February 22, 2017

PAAKU VETHALA - MY DEAR MARTHANDAN




படம்: மை டியர் மார்த்தாண்டன்
இசை: இளையராஜா
பாடியவர்: SP பாலசுப்ரமணியம்
பாடல்: வாலி

பாக்கு வெத்தல போட்டேன் பத்தல பொண்ணு பார்த்ததாலே
ஒரு பாக்கு வெத்தல போட்டேன் பத்தல பரிசம் போட்டதாலே
ஆத்தாடி ராசாத்தி அடிச்சாளே சூடேத்தி
புடிச்சேன் ஒரு கொம்பு அது புளியம்  பூங்கொம்பு
புடிச்சான் ஒரு கொம்பு அது புளியம்  பூங்கொம்பு

(பாக்கு..)

பாதிக்  கண்ணாலே சேதி சொன்னாளே பித்த நாடி சத்தமாச்சு
மோகம் தாங்காம தேகம் தூங்காம மொட்ட மாடி கெட்டுப்போச்சு
சூடும் உண்டாச்சு மூடும் வந்தாச்சு ஜோடி நான் சேரத்தான்
காதல் சங்கதி  கூறும் சுந்தரி
மாலை சூட வேளை  கூட போதை ஏற ஆசை தீர ஹோய்

(பாக்கு..)

நாடு பூராவும் தேடிப்  பார்த்தாலும் நம்மாளு போல ஏது
மாமன் நானாக பாவம் தானாக வாசல் தேடி  வந்த மாது
ஆளப்  பார்த்தாச்சு மாலை போட்டாச்சு ஜோடி சேர்ந்தாச்சம்மா
பாலைக்  காச்சுடா பாயைப்  போடுடா
வாசம் வீசும் ரோசாப்  பூவை வாங்கி வந்து தூவு தூவு ஹேய்

(பாக்கு..)

Monday, February 20, 2017

UNAKENNA MELE NINRAI - SIMLA SPECIAL




படம். : சிம்லா ஸ்பெஷல்
இசை. : M.S.விஸ்வநாதன்
குரல் : S.P.பாலசுப்ரமணியம்
பாடல் : வாலி
1... 2... 3... 4...
தகதினதக தகுந்தோம்....
தகதினதக தகுந்தோம்....
தகதினதக தகுந்தோம்....
தகதின... தகுந்தோம்த.... தோம்த.... தோம்த....தோம்த....
தகதின தோம்.... தோம்த.... தோம்த.... தோம்த....தோம்த....
தகதின தோம்.... தோம்த.... தோம்த.... தோம்த....தோம்த....
தகதின தோம்....
உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா
உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா
உனதாணை பாடுகின்றேன் நான் ரொம்ப நாளா
உனக்கென்ன மேலே நின்றாய் ஒ நந்தலாலா
தாய் மடியில் பிறந்தோம் தமிழ் மடியில் வளர்ந்தோம்
நடிகர் என மலர்ந்தோம் நாடகத்தில் கலந்தோம்
தோம்த.... தோம்த.... தோம்த.... தகதின
தோம்த.... தோம்த.... தோம்த.... தோம்த....தகதின
தோம்த.... தோம்த.... தோம்த.... தோம்த....தகதின தோம்....
ஆடாத மேடை இல்லை போடாத வேஷம் இல்லை
ஆடாத மேடை இல்லை போடாத வேஷம் இல்லை
சிந்தாத கண்ணீர் இல்லை சிரிப்புக்கும் பஞ்சம் இல்லை
கால் கொண்டு ஆடும் பிள்ளை நூல் கொண்டு ஆடும் பொம்மை
கால் கொண்டு ஆடும் பிள்ளை நூல் கொண்டு ஆடும் பொம்மை
உன் கையில் அந்த நூலா நீ சொல்லு நந்தலாலா
யாராரோ நண்பன் என்று ஏமாந்த நெஞ்சம் உண்டு
யாராரோ நண்பன் என்று ஏமாந்த நெஞ்சம் உண்டு
பூ என்று முள்ளைக்  கண்டு புரியாமல் நின்றேன் இன்று
பால் போல கள்ளும் உண்டு நிறத்தாலே ரெண்டும் ஒன்று
பால் போல கள்ளும் உண்டு நிறத்தாலே ரெண்டும் ஒன்று
நான் என்ன கள்ளா பாலா நீ சொல்லு நந்தலாலா

உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா
உனதாணை பாடுகின்றேன் நான் ரொம்ப நாளா
தகதினதக தகுந்தோம்....
தகதினதக தகுந்தோம்....
தகதினதக தகுந்தோம்....
தகதின... தகுந்தோம்த.... தோம்த.... தோம்த....தோம்த....
தகதின தோம்.... தோம்த.... தோம்த.... தோம்த....தோம்த....
தகதின தோம்.... தோம்த.... தோம்த.... தோம்த....தோம்த....
தகதின தோம்....

POI VAA MAGALE - KARNAN



படம்: கர்ணன்
இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
குரல்: சூலமங்கலம் ராஜலக்ஷ்மி
பாடல்: கண்ணதாசன்


போய் வா மகளே போய் வா
கண்ணில் புன்னகை சுமந்து
போய் வா போய் வா போய் வா

தாய் வீடென்பதும் தன் வீடே
தந்தையின் நாடும் நம் நாடே
சேயும் சேயும் வரக்கண்டால்
திறவாக் கதவும் திறவாதோ?

போய் வா மகளே போய் வா
கண்ணில் புன்னகை சுமந்து
போய் வா போய் வா போய் வா

ஒரு நாள் கோபம் ஒரு நாளே
அதில் உற்றவர் கோபம் வளராதே
மணநாள் மன்னன் உனைக் கண்டு
மதி மயங்குகிறான் நீ தளராதே

போய் வா மகளே போய் வா
கண்ணில் புன்னகை சுமந்து
போய் வா போய் வா போய் வா

காவலர் சேனை நின்றிருக்கும்
தந்தை கண்களும் உன்னைக் கண்டிருக்கும்
பாவலர் தோழியர் இசை கேட்கும்
அன்புப் பார்வையெல்லாம் உன்னை வரவேற்கும்

போய் வா மகளே போய் வா
கண்ணில் புன்னகை சுமந்து
போய் வா போய் வா போய் வா

Sunday, February 19, 2017

CHINNA PURA ONRU - ANBE SANGEETHA



படம்: அன்பே சங்கீதா
இசை: இளையராஜா
குரல்: SP பாலசுப்ரமணியம்
பாடல்: வாலி

சின்னப்புறா ஒன்று எண்ணக் கனாவினில்
வண்ணம் கெடாமல் வாழ்கின்றது
நினைவில் உலவும் நிழல் மேகம்
நூறாண்டுகள் நீ வாழ்கவே
நூறாண்டுகள் நீ வாழ்கவே

ஒருவன் இதயம் உருகும் நிலையை
அறியா குழந்தை நீ வாழ்க
உலகம் முழுதும் உறங்கும் பொழுதும்
உறங்கா மனதை நீ காண்க
கீதாஞ்சலி செய்யும் கோயில் மணி
சிந்தும் நாதங்கள் கேட்டாயோ
மணி ஓசைகளே எந்தன் ஆசைகளே கேளம்மா

சின்னப்புறா ஒன்று எண்ணக் கனாவினில்

மீட்டும் விரல்கள் காட்டும் ஸ்வரங்கள்
மறந்தா இருக்கும் பொன் வீணை
மடிமேல் தவழ்ந்தே வரும் நாள்வரை நான்
மறவேன் மறவேன் உன் ஆணை
நீ இல்லையேல் இங்கு நானில்லையே
எந்தன் ராகங்கள் தூங்காது
அவை ராகங்களா இல்லை சோகங்களா சொல்லம்மா

சின்னப்புறா ஒன்று எண்ணக் கனாவினில்
வண்ணம் கெடாமல் வாழ்கின்றது
நினைவில் உலவும் நிழல் மேகம்
நூறாண்டுகள் நீ வாழ்கவே
நூறாண்டுகள் நீ வாழ்கவே

MAANIKA THERIL - THEDI VANDHA MAAPILLAI



படம்: தேடி வந்த மாப்பிள்ளை (1970)
இசை: M S விஸ்வநாதன்
பாடல்: வாலி
குரல்: T M S, P சுசீலா

இயக்கம்: B R பந்துலு
நடிப்பு: எம் ஜி யார், ஜெயலலிதா

மாணிக்கத் தேரில் மரகதக் கலசம்
மின்னுவதென்ன என்ன
மன்னன் முகம் கனவில் வந்தது
மஞ்சள் நதி உடலில் வந்தது
மாணிக்கத் தேரில் மரகதக் கலசம்
மின்னுவதென்ன என்ன
மன்னன் முகம் கனவில் வந்தது
மஞ்சள் நதி உடலில் வந்தது
ராணி உந்தன் மேனி என்ன
ராஜவீதி தோற்றம்தானோ
ராணி உந்தன் மேனி என்ன
ராஜவீதி தோற்றம்தானோ
கேள்வி கேட்ட மன்னன் மேனி
தேவன் கோவில் தோற்றம்தானோ
கேள்வி கேட்ட மன்னன் மேனி
தேவன் கோவில் தோற்றம்தானோ
மாணிக்கத் தேரில் மரகதக் கலசம்
மின்னுவதென்ன என்ன
மன்னன் முகம் கனவில் வந்தது
மஞ்சள் நதி உடலில் வந்தது

வெண்பட்டு மேனியில்
கண்படும் வேளையில்
மூடுது மேலாடை
கண்படும் வேளையில்
கைபடுமோ என்று
கலங்குது நூலாடை
இடை படும் பாடோ சதிராட்டம்
இலைகளில் ஆடும் கனியாட்டம்
கண்ணோட்டம்
என் தோட்டம்

மாணிக்கத் தேரில் மரகதக் கலசம்
மின்னுவதென்ன என்ன
மன்னன் முகம் கனவில் வந்தது
மஞ்சள் நதி உடலில் வந்தது

தென்மலை மேகங்கள்
பொன்வலை போட்டன
கூந்தலில் நீராட
மின்னலில் மேனியும்
பின்னலில் கூந்தலும்
மிதப்பது யாராட
புது மழை போலே நீரோட
அதிசய நதியில் நானாட
நீ ஆட
ஆஹா தேனோட
மாணிக்கத் தேரில் மரகதக் கலசம்
மின்னுவதென்ன
என்ன
மன்னன் முகம் கனவில் வந்தது
மஞ்சள் நதி உடலில் வந்தது