FILM: AVAL YETRIYA DHEEPANGAL
MUSIC: DR.BHANUMATHI RAMAKRISHNA
SINGERS: SPB SJ
மாலையில் வரும் மேகங்கள் போலே ஆடும் உள்ளங்கள்
அதில் வளரும் சுக நினைவில் நான் தேடும் இன்பங்கள்

காதல் எனும் பூந்தென்றல் தேரை கண்ணில் நான் கண்டேன்
வான்வெளியில் நாம் ஒன்றினில் ஒன்றாய் வரவும் நான் கண்டேன்

அழகான தோரணங்கள் வான்மின்னலோ
அலங்கார தீபங்கள் தான் விண்மீன்களோ
அழகான தோரணங்கள் வான்மின்னலோ
அலங்கார தீபங்கள் தான் விண்மீன்களோ
இந்திரன் சபை திருமண அறை
மாலை மணம் மையலை தரும்
எங்கெங்கும் மலர்மாரி பொழிகின்றது
மாலையில் வரும் மேகங்கள் போலே ஆடும் உள்ளங்கள்
அதில் வளரும் சுக நினைவில் நான் தேடும் இன்பங்கள்
காதல் எனும் பூந்தென்றல் தேரை கண்ணில் நான் கண்டேன்
வான்வெளியில் நாம் ஒன்றினில் ஒன்றாய் வரவும் நான் கண்டேன்
மண மேளம் கார்முகிலின் இடி ஓசையோ
பாடும் இன்ப நாதஸ்வரம் குயிலோசையோ
மண மேளம் கார்முகிலின் இடி ஓசையோ
பாடும் இன்ப நாதஸ்வரம் குயிலோசையோ
மஞ்சளின் மணம் என் மனதில் வரும்
குங்கும நிறம் என் மார்பினில் விழும்
பேரின்ப சொர்க்கத்தில் நாம் வாழ்கிறோம்