Friday, April 29, 2016

NAAN ORU KOVIL NEE ORU DEIVAM - NELLIKKANI



படம்: நெல்லிக்கனி
இசை: சங்கர் கணேஷ்
குரல்: எஸ்.பி.பி., மலேசியா வாசுதேவன்
பாடல்: புலமைப்பித்தன் 

நான் ஒரு கோயில் நீ ஒரு தெய்வம் 
உன்னைத் தேடி நான் வந்தேன் 
உன்னில் என்னை நான் கண்டேன் 
உன்னால் இங்கு வாழ்கின்றேன் 

அன்னை என்ன தந்தை என்ன 
உன்னைக் கண்ட பின்னாலே 
உயர்வென்ன தாழ்வுமென்ன
உந்தன் அன்பின் முன்னாலே
கடல் நீரும் வற்றிப்போகும் 
நமதன்பு வற்றாது 
ஒரு கோடி ஜன்மம்
எங்கள் நட்புக்குப் போறாது

சொர்க்கம் நேரில் வந்தால் கூட 
உன்னைவிட்டுப் போவேனோ 
உனக்கென்று என்னைத் தந்தேன் 
எனக்கென்று வாழ்வேனோ 
விஷமென்று நீ தந்தாலும் 
அமுதாக மாறாதோ
விழி மூடி தூங்கும் போதும்
உன் வண்ணம் தோன்றாதோ


கங்கை வேடன் தன்னை இராமன்
தோழன் என்று கொண்டானே
கர்ணன் கொண்ட தோழமைக்காக
ஆவி தன்னைத் தந்தானே
கவி வேந்தன் கம்பன் வந்து
நமைப் பாட மாட்டானோ
கதையல்ல உண்மையென்று
வரலாறு காட்டானோ

THIRAVAAI NEE KANNE - PAARU PAARU PATTANAM PAARU - SPB


படம் : பாரு பாரு பட்டணம் பாரு
பாடியவர் : எஸ் பி பி
இசை : இளையராஜா
வரிகள் : வாலி


திறவாய் நீ கண்ணே திறவாய் நீ
திறவாய் நீ கதவை திறவாய் நீ
திறவாய் நீ கண்ணே திறவாய் நீ
திருப்பதி கொடையே என் திருத்தணி மலையே
திருப்பதி கொடையே என் திருத்தணி மலையே
ஒரு சந்தன காவடி தூக்கறேன் பூங்கொடியே
திறவாய் நீ கண்ணே திறவாய் நீ
திறவாய் நீ கதவை திறவாய் நீ

ஆசை வந்தாச்சு அப்பன் சொல்ல தள்ளு தள்ளு
அடியே ஆண் பாவம் வேண்டாம்னு சொல்லு
வாழ்க்கை வேணுமின்னு பொம்பளதான் கேட்பா
புருஷன் நான் கேட்டா போடுறயே தாப்பா
யோகம் வந்து எனக்காக காத்திருக்கு தேவி
யோகம் வந்து எனக்காக காத்திருக்கு தேவி
உன்னைப் புடிப்பேன் கட்டி அணைப்பேன்
சொர்க்க கதவை தட்டி திறப்பேன்
ரொக்க பணத்தில் பணத்தில் துள்ளி குதிப்பேன்
ரெக்கை இன்றி வானத்தில பறப்பேன்

திறவாய் நீ கதவை திறவாய் நீ
திறவாய் நீ கண்ணே திறவாய் நீ

திருப்பதி கொடையே என் திருத்தணி மலையே
திருப்பதி கொடையே என் திருத்தணி மலையே
ஒரு சந்தன காவடி தூக்கறேன் பூங்கொடியே
திறவாய் நீ கண்ணே திறவாய் நீ
திறவாய் நீ கதவை திறவாய் நீ

குருவும் சுக்கிரனும் கூடி வரும் போது
குறுக்கே நிற்குது கூறு கெட்ட ஆளு
தாலி கட்டி சன்யாசி ஆக்கியதும் ஏனோ
தாலி கட்டி சன்யாசி ஆக்கியதும் ஏனோ
பொண்ண வெலக்கி விக்க நினைக்கும் அப்பன் எதுக்கு
உன்னை தவிற வேறு கதியே இல்லை எனக்கு
ஆசைகள் உன்னிடமே இருக்கு

திறவாய் நீ கதவை திறவாய் நீ
திறவாய் நீ கண்ணே திறவாய் நீ
திருப்பதி கொடையே என் திருத்தணி மலையே
திருப்பதி கொடையே என் திருத்தணி மலையே
ஒரு சந்தன காவடி தூக்கறேன் பூங்கொடியே
திறவாய் நீ கண்ணே திறவாய் நீ

ONNUM THERIYAADHA PAAPA - SOORAKKOTTAI SINGAKKUTTI - SPB SJ


திரைப்படம் : சூரக்கோட்டை சிங்கக்குட்டி
பாடியவர் : எஸ் பி பி ...எஸ். ஜானகி
இசை : இளையராஜா
வரிகள் : வாலி


ஒண்ணும் தெரியாத பாப்பா கண்ணை அடிச்சாளாம்
கண்ணை அடிச்சதும் மாமா கையை பிடிச்சானாம்
சின்னப் பொண்ணு பாவம் சொல்லச் சொல்ல தாபம்
துள்ளித் துள்ளி குதிச்சாளாம் ஹே.. ஹெ...
ஒண்ணும் தெரியாத பாப்பா கண்ணை அடிச்சாளாம்
கண்ணை அடிச்சதும் மாமா கையை பிடிச்சானாம்
சின்னப் பொண்ணு பாவம் சொல்லச் சொல்ல தாபம்
துள்ளித் துள்ளி குதிச்சாளாம் ஹே.. ஹெ...

டிஸ்கோ இது நல்ல டெம்போ இது
இங்கு டான்ஸ் ஆட சான்ஸ் ஆனது
டூயட்டுதான் இந்த பூ மொட்டு தான்
உந்தன் தோள்தொட்டுதான் பாடுது
சிங்கப்பூரிலே தங்கத்தேரிலே
தவழ்ந்த வெண்ணிலாவே
தரையில் ஆடலாமா தனிச்சு வாடலாமா

ஒண்ணும் தெரியாத பாப்பா கண்ணை அடிச்சாளாம்
கண்ணை அடிச்சதும் மாமா கையை பிடிச்சானாம்
சின்னப் பொண்ணு பாவம் சொல்லச் சொல்ல தாபம்
துள்ளித் துள்ளி குதிச்சாளாம் ஹே.. ஹெ...
ஒண்ணும் தெரியாத பாப்பா கண்ணை அடிச்சாளாம்

மிஸ் மாலினி எந்தன் ஜெகன் மோகினி
அடி அம்மா நீ செம்மாங்கனி
மிஸ் அல்லவா ஒரு கிஸ் பண்ணவா
இதழ் தித்திக்கும் காஷ்மீர் கனி
நேத்து ராத்திரி பார்த்த சுந்தரி நேரில் வந்ததென்ன
நெருங்கிப் பாடலாமா மயங்கி ஆடலாமா

ஒண்ணும் தெரியாத பாப்பா கண்ணை அடிச்சாளாம்
கண்ணை அடிச்சதும் மாமா கையை பிடிச்சானாம்
சின்னப் பொண்ணு பாவம் சொல்லச் சொல்ல தாபம்
துள்ளித் துள்ளி குதிச்சாளாம் ஹே.. ஹெ...
ஒண்ணும் தெரியாத பாப்பா கண்ணை அடிச்சாளாம்
கண்ணை அடிச்சதும் மாமா கையை பிடிச்சானாம்
சின்னப் பொண்ணு பாவம் சொல்லச் சொல்ல தாபம்
துள்ளித் துள்ளி குதிச்சாளாம் ஹே.. ஹெ...

VAADI AMBIGAIYE VAADAA MALLIGAIYE - MOWNAM KALAIGIRADHU - SPB


படம்: மௌனம் கலைகிறது
இசை : ஷங்கர் கணேஷ்
பாடியவர்: எஸ்.பி.பி

வாடி அம்பிகையே வாடா மல்லிகையே
புதுப்புது வளையல் ஓசைதான்
எவளுக்கும் என் மேல் ஆசைதான்
காதலிக்க கத்துதறேன் கத்துக்கடி
கட்டிக்கொள்ள ஒட்டிக்கொள்ள ஒத்துக்கடி

ஆஹா..வாடி அம்பிகையே வாடா மல்லிகையே
புதுப்புது வளையல் ஓசைதான்
எவளுக்கும் என் மேல் ஆசைதான்
காதலிக்க கத்துதறேன் கத்துக்கடி
கட்டிக்கொள்ள ஒட்டிக்கொள்ள ஒத்துக்கடி

ராதா உனக்கொரு தோதா
நான் தான் வாலிபக்காளை
எனக்கிங்கே வேறே என்னடி வேலை
மாலா இடை ஒரு நூலா
நான்தான் இத்தன நாளா உனை
எதிர்பார்த்தேன் ராத்திரி பகலா
ஒரே சுகம் ஒரே தரம்
வழங்கலாம் நாளும் மயங்கலாம்
மாலை பொழுதினில் அருகினில் வா

வாடி அம்பிகையே வாடா மல்லிகையே
புதுப்புது வளையல் ஓசைதான்
எவளுக்கும் என் மேல் ஆசைதான்
காதலிக்க கத்துதறேன் கத்துக்கடி
கட்டிக்கொள்ள ஒட்டிக்கொள்ள ஒத்துக்கடி

ஆடை சுமந்தொரு ஓடை
நாளும் பார்வையில் ஓடும்
நான் அதில் நீந்தும் மன்மத ஓடம்
போதை தலை வரை ஏறும்
கால்கள் நடனங்கள் ஆடும்
இளமையின் கீதம் நயனங்கள் பாடும்
இதோ இதழ் இதோ இடை
அணைக்கலாம் தீயை அணைக்கலாம்
ஆசை அருவியிலே குளித்திட வா வா வா

வாடி அம்பிகையே வாடா மல்லிகையே
புதுப்புது வளையல் ஓசைதான்
எவளுக்கும் என் மேல் ஆசைதான்
காதலிக்க கத்துதறேன் கத்துக்கடி
கட்டிக்கொள்ள ஒட்டிக்கொள்ள ஒத்துக்கடி
ப ப ரபரப பா ப ப ரபரப பா

Thursday, April 28, 2016

CHITHIRA POOVIZHI VASALILE - IDHAYATHIL NEE



படம்: இதயத்தில் நீ
இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
குரல்: L .R .ஈஸ்வரி, P.சுசீலா
பாடல்: மாயவநாதன்




சித்திரப்பூவிழி வாசலிலே வந்து யார் நின்றவரோ
இந்தக்  கட்டுக்கரும்பினை தொட்டுக்குழைந்திட யார் வந்தவரோ
யார் நின்றவரோ யார் வந்தவரோ

தென்றல் அழைத்து வர தங்கத்தேரினில் வந்தாரே
புன்னகை மின்னிட வந்து அருகினில்
நின்றவர் என்னவரே இடம் தந்த என் மன்னவரே


சித்திரப்பூவிழி  வாசலிலே அவர்தான் நின்றவரே
இந்தக்  கட்டுக்கரும்பினை தொட்டுக்குழைந்தவர் தான் என்னவரே
யார் நின்றவரோ அவர் தான் என்னவரே


கட்டழகில் கவி கம்பன் மகனுடன் ஓட்டி இருந்தவரோ
இந்தப் பட்டு உடலினை தொட்டணைக்கும்
கலை கற்றுத்  தெளிந்தவரோ
உன்னை மட்டும் அருகினில் வைத்து
தினம் தினம் சுற்றி வருபவரோ
நீ கற்றுக்  கொடுத்ததை ஒத்திகை பார்த்திடும்
முத்தமிழ் வித்தகரோ
கலை முற்றும் அறிந்தவரோ
காதல் மட்டும் தெரிந்தவரோ (சித்திர)


வண்ணக் கருவிழி தன்னில் ஒரு விழி
என்று அழைப்பதுவோ
பசும் பொன்னிற் புதியதை கண்ணன் எனப்
பெயர் சொல்லித்  துதிப்பதுவோ
ஒளி மின்னி வரும் இரு கண்ணசைவில்
கவி மன்னவன் என்பதுவோ இல்லை
தன்னை கொடுத்தென்னை தன்னில் மறைத்தவர்
வண்ணப் புது மலரே
அவர் நெஞ்சம் மலரணையே
மனம் எங்கும் நிறைந்தவரே (சித்திர)

சித்திர பூவிழி வாசலிலே அவர்தான் நின்றவரே
இந்தக்  கட்டுக்கரும்பினை தொட்டுக்குழைந்தவர் தான் என்னவரே
யார் நின்றவரோ அவர் தான் என்னவரே

"சினிமா சித்தன்' - மாயவநாதன்

மறைந்துபோன திரைப்படப் பாடலாசிரியர்களுள் தனக்கென ஒரு தனிமுத்திரை பதித்தவர் கவிஞர் மாயவநாதன். விளம்பர வெளிச்சமில்லாமல் இருட்டுக்குள் புதைந்துபோன சினிமா சித்தன். கேட்கும் தொகையை வழங்கத் தயாரிப்பாளர்கள் த
மறைந்துபோன திரைப்படப் பாடலாசிரியர்களுள் தனக்கென ஒரு தனிமுத்திரை பதித்தவர் கவிஞர் மாயவநாதன். விளம்பர வெளிச்சமில்லாமல் இருட்டுக்குள் புதைந்துபோன சினிமா சித்தன். கேட்கும் தொகையை வழங்கத் தயாரிப்பாளர்கள் தயாராக இருந்தபோதும், பணத்தை மட்டுமே குறியாகக்கொண்டு பாடல் எழுதாத பத்தினிப் பாடலாசிரியர்.
திரையிசைப் பாடல்கள் பிரசித்தம் பெறத்துவங்கிய காலகட்டத்தில் பிரபலமாக இருந்தவர் கண்ணதாசன். அதனால் பிற கவிஞர்கள் எழுதிய நல்ல பாடல்கள் கூட கண்ணதாசன் எழுதியதாக இருக்கும் என்பதே வெகுஜனங்களின் யூகமானதால், மாயவநாதன் கண்ணுக்கு எட்டாத தூரத்திலேயே நின்றுவிட்டார்.
சொந்த ஊர், நெல்லை மாவட்டத்திலுள்ள பூலாங்குளம். தீவிரமான காளிபக்தர். கரம்பைச் சித்தர், கரூர் சித்தர், பாலமுருக சித்தர் என்று சித்தர்களுடன் சிநேகமாக இருந்தவர். படத்தயாரிப்பாளர் தேவரின் வேண்டுகோளை ஏற்று, மருதமலை முருகன் கோயில் கல்வெட்டில் பதிப்பதற்காக சில பாடல்களை மாயவநாதன் எழுதிக்கொடுத்தார். அவரது அழியாப் புகழுக்கு அந்தக் கல்வெட்டு ஒரு நல்ல அடையாளமாகும்.
சென்னை-மயிலாப்பூரில் உள்ள ஒரு விடுதியில்தான் அவர் வெகுகாலம் தங்கியிருந்தார். நடிகை சந்திரகாந்தாவின் நாடகக்குழு அப்போது மிகவும் பிரசித்தம். அந்தக் குழுவினரின் நாடகங்களுக்குப் பாடல்கள் எழுதியதன் மூலம் திரையுலகின் கவனத்தைக் கவர்ந்தவர் மாயவநாதன். 1960 முதல் 1971 வரை, சில படங்களுக்குப் பாடல்கள் எழுதினார். இவர் திரைப்படங்களுக்கு எழுதிய பாடல்கள் எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும், எழுதிய அத்தனை பாடல்களிலும் வெற்றிபெற்ற கவிஞன். "படித்தால் மட்டும் போதுமா' திரைப்படத்தில்,
""தண்ணிலவு தேனிரைக்க
தாழைமடல் நீர்தெளிக்க
கன்னிமகள் நடைபயின்று வந்தாள்-இளம்
காதலனைக் கண்டு நாணி நின்றாள்''
என்ற பாடல் மூலம் அறிமுகமாகி, தன் முதல் பாடலிலேயே தனி முத்திரையைப் பதித்தார். பழந்தமிழ்க் கவிதை சாயலில் இலக்கிய உணர்வலைகள் எழும்ப முதல் பாடலை எழுதி, "யார் இந்த மாயவநாதன்?' என்று திரையுலகில் மட்டுமல்லாமல் இலக்கிய உலகிலும் பரபரப்பை ஏற்படுத்திய கவிஞர் அவர்.
""கண்ணதாசனின் செல்வாக்கை உடைத்த முதல் கவிஞன் என்ற பெருமையுடையவன் மாயவநாதன்'' என்று புதுக்கவிஞர் நா.காமராசன், தான் எழுதிய "சொர்க்க வசந்தத்தின் ஊமைக் குயில்கள்' என்ற நூலில் குறிப்பிட்டிருப்பது, மாயவநாதன் பற்றிய நேர்மையான மதிப்பீடாகும். இதயத்தில் நீ - திரைப்படத்தில்,
""சித்திரப் பூவிழி வாசலிலே வந்து யார் நின்றவரோ - இந்த
கட்டுக்கரும்பினைத் தொட்டுக் குழைந்திட
யார் வந்தவரோ? - அவர்
தான் என்னவரே...''
என்ற பாடல் இயற்றுவதில் கைதேர்ந்தவர் மாயவநாதன் என்பதற்கு இந்தப் பாடலின் மொழி லாகவம் ஒரு நிரூபணமாகும். சந்தச்சுவையும், கற்பனை வளமும் மிக்க இந்தப் பாடல் திரைப்படப் பாடல்களின் வரிசையில் ஒரு வாடாமலர் என்றுதான் கூறவேண்டும்.
பூமாலை - திரைப்படத்தில், இருளில் ஓர் ஆடவனால் கற்பு சூறையாடப்பட்ட பெண் ஒருத்தியின் நிலையை விளக்க...
""கற்பூரக் காட்டினிலே கனல் விழுந்து விட்டதம்மா''
என்று பளிச்சென்று நெஞ்சைத் தாக்குகின்ற மின்னல் வரிகளைப் படைத்தார்.
மாயவநாதன் யார்க்கும் அஞ்சாத, பணிந்துபோகாத குணமுடையவர். ஒருமுறை "மறக்க முடியுமா' திரைப்படத்துக்குப் பாடல் எழுத வந்தவர், இசையமைப்பாளரிடம் "என்ன மெட்டு?' என்று கேட்டார். அந்த இசையமைப்பாளர், "மாயவநாதன்...மாயவநாதன்' என்று தத்தக்காரத்தைக் கிண்டலாகக் கூறினார். மாயவநாதனுக்கு "கவிக்கோபம்' வந்துவிட்டது. கிடைத்த வாய்ப்புக்காக மண்டியிடாமல் உடனே வெளியேறிவிட்டார். பிறகு அந்த மெட்டுக்கு மு.கருணாநிதி எழுதியதுதான் "காகித ஓடம் கடலலை மீது' - என்ற பாடல்.
மாயவநாதனின் கவியாளுமையை முற்றிலும் அறிந்து, தான் எழுதித் தயாரித்த படங்களில் வாய்ப்புகள் அதிகம் வழங்கி, மாயவநாதனுக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தவர் மு.கருணாநிதி என்பதும் மறுக்க இயலாத உண்மை. பூம்புகார் திரைப்படத்தில் மாயவநாதன் எழுதிய பாடல்கள், சினிமாப் பாடல்கள் என்பதை மறந்துவிட்டால் அத்தனையும் சித்தர் பாடல்கள்தான். தத்துவசாரமும், மனிதநேயமும் உள்ளடங்கிய பாடல்கள் அவை.
பந்தபாசம் - திரைப்படத்துக்கு கண்ணதாசனுக்குப் பதிலாக யாரை வைத்து எழுதுவது என்ற கேள்வி எழுந்தது. மாயவநாதனைத்தான் தெரிவு செய்தார்கள். "பந்தபாசம்' படத்தில் வருகிற...
""நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ? - நெஞ்சில்
நினைத்ததிலே நடந்ததுதான் எத்தனையோ?
கோடுபோட்டு வாழ்ந்தவர்கள் எத்தனையோ?
குறியும் தவறிப் போனவர்கள் எத்தனையோ?''
என்ற பாடல், அது வெளிவந்த காலத்தில் மட்டுமல்ல, இன்றைக்கும் பிரபலமானது.
பாலும் பழமும் - திரைப்படத்தில் ஒரு பாடல்,
""பழுத்துவிட்ட பழமல்ல நீ விழுவதற்கு
பாய்ந்துவிட்ட நதியல்ல நீ ஓய்வதற்கு
எழுதிவிட்ட ஏடல்ல நீ முடிவதற்கு
இடையினிலே முடிவென்றால் முதல் எதற்கு?''
வாழ்வின் வாயிலில் முதல் அடியை எடுத்து வைக்கும் அதே கணத்தில், சாவின் வாயிலில் அடுத்த அடியை எடுத்து வைக்க நேர்ந்துவிட்ட ஓர் இளம் கதாபாத்திரத்தின் நிலையை முதல் மூன்று வரிகளில் பெருஞ்சோகத்துடன் கூறிவிட்டு, நான்காவது வரியில் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறார். ""இடையினிலே முடிவென்றால் முதல் எதற்கு?'' அற்ப ஆயுளில் ஒரு ஜீவனை முடித்து வைக்கும் விதியின் பிடரியில் அறையும் கேள்வி இது.
என்னதான் முடிவு - திரைப்படத்தில் மனதை உருகவைக்கும்
""பாவியென்னை மறுபடியும் பிறக்க வைக்காதே - செய்த பாவமெல்லாம் தீருமுன்னே இறக்க வைக்காதே''
என்ற மிகச்சிறந்த தத்துவப் பாடல் ஒன்றை எழுதினார். நாத்திகவாதியின் மனதைக்கூட கரைந்துபோக வைக்கும் ஆன்மிக வரிகள் அவை.
திரையிசையில் மாயவநாதன் எழுதிய தத்துவப் பாடல்கள் தலைசிறந்தவை. இலக்கிய வகைகளில் இசைப்பாடலும் ஒருவகை. தமிழ் மரபில் இசைப்பாடல்கள் காலாவதியாகிவிட்ட நிலையில் அதன் நீட்சியாக திரையிசைப் பாடல்கள் உருவானது. அந்த திரையிசைப் பாடல்களுக்கு இசையின்பத்தைத் தாண்டி ஓர் இலக்கிய இன்பத்தை ஏற்படுத்திய கவிஞர்களுள் முக்கியமானவர் மாயவநாதன்.
1971-இல் மாயவநாதன் காலமானார். "டெல்லி டூ மெட்ராஸ்' - திரைப்படத்தின் பெயர் பட்டியலில் மாயவநாதனுக்கு அஞ்சலி செலுத்தி, அந்தக் கவிஞன் மீதிருந்த மதிப்பை வெளிப்படுத்தினார்கள்.
மேதாவிலாசத்துடன் பாடல்கள் புனைந்த மாயவநாதன் சொற்ப வாய்ப்புகளையும், அற்ப ஆயுளையும் பெற்றது தமிழ்ப் பாடலுலகின் துரதிருஷ்டம் என்றுதான் கூறவேண்டும். பொய்யும், புரட்டும், போலி விளம்பரமும் மலிந்த சினிமா உலகில், சித்த நெறியும், சத்திய வெறியும்கொண்டு ஞானச் சிறகடித்துப் பறந்த கவிஞன் மாயவநாதன்.

CHITHIRA SEVVANAM - KAATRINILE VARUM GEETHAM



படம்: காற்றினிலே வரும் கீதம் 
இசை: இளையராஜா 
குரல்: P. ஜெயச்சந்திரன் 
பாடல்: பஞ்சு அருணாசலம்
தையரத்தைய்யா தையரத்தைய்யா (4)

சித்திரச் செவ்வானம் சிரிக்கக்கண்டேன்.. என் முத்தான முத்தம்மா
என் கண்ணான கண்ணம்மா
ஏ குர்ய எலவாலி தண்டெலவாலம்
தையரத்தய்யா தையரத்தைய்யா

(சித்திரச் செவ்வானம்) மையை இட்ட கண்ணாலே மையல் தந்த நேரம்
முதன் முதலா தொட்டேனே வாய்க்காக்கரை ஓரம்
சாயாமல் சாய்ந்தாளே மார்பிலே
அள்ளிக்கட்டும் கண்டாங்கி அரைகுறையா ஒதுங்க
அலுங்காம அணைச்சாளே வெதுவெதுப்பா மயங்க
மஞ்சள் கண்ட கைகாரி மயக்கிவிட்டா என்னை
ஏ குர்ய எலவாலி தண்டெலவாலம்
தையரத்தைய்யா தையரத்தய்யா 

(சித்திரச் செவ்வானம்) போய்வரவா என்றாலே ஏக்கத்துடன் பார்ப்பா
நான் திரும்பி வரும்வரையில் கரையினிலே நிப்பா
உணவில்லை உறவில்லை வாடுவாள்
என் முகத்தைப்பார்த்ததுமே துள்ளித்துள்ளி வருவா
முத்தான முத்தங்கள் அள்ளி அள்ளித்தருவா
சொக்கி சொக்கிச் சிரிப்பாளே சொக்கத்தங்கம் போலே
ஏ குர்ய எலவாலி தண்டெலவாலம்
தையரத்தைய்யா தையரத்தய்யா 

(சித்திரச் செவ்வானம்.)

Tuesday, April 26, 2016

MUGAM SENTHAMARAI - VEDIKKAI MANIDHARGAL



படம்: வேடிக்கை மனிதர்கள்
இசை: சங்கர் கணேஷ்
குரல்: எஸ்.ஜானகி
பாடல்: முத்துலிங்கம்


முகம் செந்தாமரை என்றானே
இதழ் ரோஜாவெனச்  சொன்னானே
முகம் தாமரை மலரா
இதழ் ரோஜா நிறமா
அடியே நீயே சொல்லு


மானாட்டம் விழியென்றான்
மயிலாட்டம் ஒயிலென்றான்
மானா மயிலா நானா அறியேனே
மான் கூட்டம் என்னாட்டம் பேசுமோ
பெண்ணாட்டம் மயிலாடுமோ
முல்லைக்கொடியே முத்துக்கிளியே
இந்த சந்தேகம் தீருங்களேன்



இனி ஒரு முறை
அவன் வரும்வரை
மனம் தவிப்பதை
உடல் கொதிப்பதை
யாரிடம் போய் நான் சொல்வது
அவன் மீண்டும் வருவானா
மலர்மேனி தொடுவானா
அவன் கூட மனம் ஓட
அவன் பார்வை விழி தேட
உறங்காமல் பொழுதோடுது


அவன் என்னைத்  தாலாட்ட
 நான் கொஞ்சிப்  பாராட்ட
புதுநாள் திருநாள் சுபநாள் வர வேண்டும்
அவன் மார்பில் பொன்னூஞ்சல் ஆடுவேன்
ஆனந்த நீராடுவேன்
இன்ப நினைவும் இந்த சுகமும்
இனி என்றென்றும் நிலையாகுமே


Monday, April 25, 2016

MAAVEDUTHTHU POOKKOLAM - KARAIYAI THODAADHA ALAIGAL - SPB VIDHYA



திரைப்படம்: கரையை தொடாத அலைகள்
பாடியவர்கள் : எஸ் பி பி வித்யா
இசை: ஷங்கர் கணேஷ்

மாவெடுத்து பூக்கோலம் போட்ட புள்ள நீதாண்டி
மனசுக்குள்ள கோலம் போட நான் இருக்கேன் வாயேண்டி
மாவெடுத்து பூக்கோலம் போட்ட புள்ள நீதாண்டி
மனசுக்குள்ள கோலம் போட நான் இருக்கேன் வாயேண்டி
ஹொய்ன ஜொ ஹொ ஹொய்ன ஹொய்னா ஹொ ஹொ ஹொய்னா

எதுத்த வூடு உன்வூடு எழுந்திரிச்சா உம்மூஞ்சி
எதுத்த வூடு உன்வூடு எழுந்திரிச்சா உம்மூஞ்சி
பூவப்போல சிரிக்கும் புள்ள புடிச்சிருக்கா என்மூஞ்சி
பூவப்போல சிரிக்கும் புள்ள புடிச்சிருக்கா என்மூஞ்சி
கோளி எப்பக்கூவும் என நாந்தான் எதிர்பார்க்க
பாட்டு எப்ப கேக்கும் என நீதான் உடல் வேக்க
ரெண்டும் சின்னவயசு நெஞ்சும் ரொம்ப எளசு ஹா ஹா ஹா

மாவெடுத்து பூக்கோலம் போட்ட புள்ள நீதாண்டி
மனசுக்குள்ள கோலம் போட நான் இருக்கேன் வாயேண்டி
மாவெடுத்து பூக்கோலம் போட்ட புள்ள நீதாண்டி
மனசுக்குள்ள கோலம் போட நான் இருக்கேன் வாயேண்டி
ஹொய்ன ஜொ ஹொ ஹொய்ன ஹொய்னா ஹொ ஹொ ஹொய்னா

மல்லியப்பூ காட்டோரம் பூ பறிக்கப்போறேண்டி
மல்லியப்பூ காட்டோரம் பூ பறிக்கப்போறேண்டி
பூ பறிச்ச கையால் நானே மால கட்டி வாரேண்டி
பூ பறிச்ச கையால் நானே மால கட்டி வாரேண்டி
மேளம் கெட்டி மேளம் கொட்டும் காலம் வரவேணும்
முடிச்சு மூணு முடிச்சு பட்டு கழுத்தில் இட வேணும்
அடுத்து என்ன நடக்கும் அதுதான் ரொம்ப இனிக்கும்

மாவெடுத்து பூக்கோலம் போட்ட புள்ள நீதாண்டி
மனசுக்குள்ள கோலம் போட நான் இருக்கேன் வாயேண்டி
மாவெடுத்து பூக்கோலம் போட்ட புள்ள நீதாண்டி
மனசுக்குள்ள கோலம் போட நான் இருக்கேன் வாயேண்டி
ஹொய்ன  ஹொ ஹொய்ன ஹொய்னா ஹொ ஹொ ஹொய்னா

PANIVIZHUM MALAR VANAM - NINAIVELLAAM NITHYA - SPB


திரைப்படம் : நினைவெல்லாம் நித்யா
பாடியவர் : எஸ் பி பி
இசை : இளையராஜா
வரிகள் : வைரமுத்து


பனி விழும் மலர் வனம் உன் பார்வை ஒரு வரம்
பனி விழும் மலர் வனம் உன் பார்வை ஒரு வரம்
இனி வரும் முனிவரும் தடுமாறும் கனிமரம்... ஏஹே
பனி விழும் மலர் வனம் உன் பார்வை ஒரு வரம்
பனி விழும் மலர் வனம் உன் பார்வை ஒரு வரம்
இனி வரும் முனிவரும் தடுமாறும் கனிமரம் ஏஹே
பனி விழும் மலர் வனம் உன் பார்வை ஒரு வரம்

சேலை மூடும் இளஞ்சோலை மாலை சூடும் மலர் மாலை
சேலை மூடும் இளஞ்சோலை மாலை சூடும் மலர் மாலை
இருபது நிலவுகள் நகமெங்கும் ஒளிவிடும் ஏஹே
இளமையின் கனவுகள் விழியோரம் துளிர்விடும்
கைகள் இடைதனில் நெளிகையில் இடைவெளி குறைகையில்
எரியும் விளக்குச் சிரித்துக் கண்கள் மூடும்

பனி விழும் மலர் வனம் உன் பார்வை ஒரு வரம்
பனி விழும் மலர் வனம் உன் பார்வை ஒரு வரம்
இனி வரும் முனிவரும் தடுமாறும் கனிமரம்... ஏஹே
பனி விழும் மலர் வனம் உன் பார்வை ஒரு வரம்
பனி விழும் மலர் வனம் உன் பார்வை ஒரு வரம்
இனி வரும் முனிவரும் தடுமாறும் கனிமரம் ஹ ஹா ஹா
இனி வரும் முனிவரும் தடுமாறும் கனிமரம்

காமன் கோவில் சிறைவாசம்
காலை எழுந்தால் ஹஹஹ பரிகாசம்
காமன் கோவில் சிறைவாசம் காலை எழுந்தால் பரிகாசம்
தழுவிடும் பொழுதிலே இடம் மாறும் இதயமே ஏஹே
வியர்வையின் மழையிலே பயிராகும் பருவமே
ஆடும் இலைகளில் வழிகிற நிலவொளி இரு விழி
மழையில் நனைந்து மகிழும் வானம்பாடி

பனி விழும் மலர் வனம் உன் பார்வை ஒரு வரம்
பனி விழும் மலர் வனம் உன் பார்வை ஒரு வரம்
இனி வரும் முனிவரும் தடுமாறும் கனிமரம்... ஏஹே
பனி விழும் மலர் வனம் உன் பார்வை ஒரு வரம்
பனி விழும் மலர் வனம் உன் பார்வை ஒரு வரம்
இனி வரும் முனிவரும் தடுமாறும் கனிமரம் ஏஹே
பனி விழும் மலர் வனம்
பனி விழும் மலர் வனம்
பனி விழும் மலர் வனம்

ROJAAVAI THAALAATTUM THENDRAL - NINAIVELLAAM NITHYA - SPB SJ



திரைப்படம் : நினைவெல்லாம் நித்யா
பாடியவர் : எஸ் பி பி... எஸ் ஜானகி
இசை : இளையராஜா
வரிகள் : வைரமுத்து


ரோஜாவைத் தாலாட்டும் தென்றல்
பொன்மேகம் நம் பந்தல்
உன் கூந்தல் என் ஊஞ்சல்
உன் வார்த்தை சங்கீதங்கள் ஹாஹா
ரோஜாவைத் தாலாட்டும் தென்றல்
பொன்மேகம் நம் பந்தல்

இலைகளில் காதல் கடிதம் வண்டு எழுதும் பூஞ்சோலை
விரல்களில் மேனி முழுதும் இளமை வரையும் ஓர் கவிதை
இலைகளில் காதல் கடிதம் வண்டு எழுதும் பூஞ்சோலை
விரல்களில் மேனி முழுதும் இளமை வரையும் ஓர் கவிதை
மெளனமே சம்மதம் என்று ஹ்ம்ம்ம்
தீண்டுதே மன்மத வண்டு ஹா
மெளனமே சம்மதம் என்று ஹ்ம்ம்ம்
தீண்டுதே மன்மத வண்டு
பார்த்தாலே தள்ளாடும் பூச்செண்டு

ரோஜாவைத் தாலாட்டும் தென்றல்
பொன்மேகம் நம் பந்தல்
உன் கூந்தல் என் ஊஞ்சல்

வசந்தங்கள் வாழ்த்தும்பொழுது உனது கிளையில் பூவாவேன்
இலையுதிர் காலம் முழுதும் மகிழ்ந்து உனக்கு வேராவேன்
வசந்தங்கள் வாழ்த்தும்பொழுது உனது கிளையில் பூவாவேன்
இலையுதிர் காலம் முழுதும் மகிழ்ந்து உனக்கு வேராவேன்
பூவிலே மெத்தைகள் தைப்பேன்... ஹா
கண்ணுக்குள் மங்கையை வைப்பேன்...ஹா
பூவிலே மெத்தைகள் தைப்பேன்
கண்ணுக்குள் மங்கையை வைப்பேன்
நீ கட்டும் சேலைக்கு நூலாவேன் ஹா ஹா ..ஹா

ரோஜாவைத் தாலாட்டும் தென்றல்
பொன்மேகம் நம் பந்தல்
உன் கூந்தல் என் ஊஞ்சல்
உன் வார்த்தை சங்கீதங்கள்
ரோஜாவைத் தாலாட்டும் தென்றல்
பொன்மேகம் நம் பந்தல்

THOLINMELE BHAARAM ILLE - NINAIVELLAAM NITHYAA- SPB



திரைப்படம் : நினைவெல்லாம் நித்யா
பாடியவர் : எஸ் பி பி
இசை : இளையராஜா
வரிகள் : வைரமுத்து

ஏஏஏஏ ஏஏஏஏஏஏ ஏலோஏலோ
ஏலோ ஏலோ ஏலேலேலோ ஏலேலேலோ
ஏலோ ஏலோ ஏலோ ஏலோ
ஏலேலேலோ ஏலேலேலோ ஏஏஏஏஏ

தோளின் மேலே பாரம் இல்லே
கேள்வி கேட்க யாரும் இல்லே
தோளின் மேலே பாரம் இல்லே
கேள்வி கேட்க யாரும் இல்லே
அட மாமாமாமா மாமாமியா
நீயா மாமா ஆசாமியா
அட மாமாமாமா மாமாமியா
நீயா மாமா ஆசாமியா
தோளின் மேலே பாரம் இல்லே
கேள்வி கேட்க யாரும் இல்லே

ஏஏஏஏ ஏஏஏஏஏஏ ஏலோஏலோ
ஏலோ ஏலோ ஏலேலேலோ ஏலேலேலோ
ஏலோ ஏலோ ஏலோ ஏலோ

லோகத்தில் ஏது ஏகாந்தம் இனி என்றென்றும்
பேரின்பம் எங்கள் வேதாந்தம் இது பொன் மஞ்சம்
லோகத்தில் ஏது ஏகாந்தம் இனி என்றென்றும்
பேரின்பம் எங்கள் வேதாந்தம் இது பொன் மஞ்சம்
பாதையெல்லாம் மல்லியப்பூ வாசம் வந்தா யார் பொறுப்பு
பாதையெல்லாம் மல்லியப்பூ வாசம் வந்தா யார் பொறுப்பு
நான் வானம் தொட்டு வாழும் சிட்டு
வாழ்க்கைக்கிங்கே சட்டமில்லே வானத்தின் மேல் வட்டம் இல்லே

தோளின் மேலே பாரம் இல்லே
கேள்வி கேட்க யாரும் இல்லே
அட மாமாமாமா மாமாமியா
நீயா மாமா ஆசாமியா

ஹே தரரத்தா ராதாராதரரத்தா தா

யாருக்கு நாளை சொந்தமோ யார் கண்டது
நாருக்கு மாலை சொந்தமோ யார் சொன்னது
யாருக்கு நாளை சொந்தமோ யார் கண்டது
நாருக்கு மாலை சொந்தமோ யார் சொன்னது
தத்துவங்கள் தேவையில்லே சோகம் என்றால் என்ன விலை
தத்துவங்கள் தேவையில்லே சோகம் என்றால் என்ன விலை
நான் பாடும் பட்சி காமன் கட்சி
காற்றுக்கொரு கஷ்டம் உண்டோ கடலுக்கென்றும் நஷ்டம் உண்டோ

தோளின் மேலே பாரம் இல்லே
கேள்வி கேட்க யாரும் இல்லே
தோளின் மேலே பாரம் இல்லே
கேள்வி கேட்க யாரும் இல்லே
அட மாமாமாமா மாமாமியா
நீயா மாமா ஆசாமியா
அட மாமாமாமா மாமாமியா
நீயா மாமா ஆசாமியா
அட மாமாமாமா மாமாமியா
நீயா மாமா ஆசாமியா
அட மாமாமாமா மாமாமியா




NEEDHAANE ENDHAN PONVASANDHAM - NINAIVELLAAM NITHYAA - SPB


திரைப்படம் : நினைவெல்லாம் நித்யா
பாடியவர் : எஸ் பி பி
இசை : இளையராஜா
வரிகள் : வைரமுத்து


நீதானே எந்தன் பொன் வசந்தம்
புது ராஜ வாழ்க்கை நாளை உன் சொந்தம்

நீதானே எந்தன் பொன் வசந்தம்
புது ராஜ வாழ்க்கை நாளை உன் சொந்தம்
ஆஹா நீதானே எந்தன் பொன் வசந்தம்
புது ராஜ வாழ்க்கை நாளை உன் சொந்தம்
என் வாசல் ஹே வரவேற்கும் அந்நேரம்
பொன் சொர்க்கம் ஹே அரங்கேறும் கண்ணோரம்
நீதானே எந்தன் பொன் வசந்தம்
புது ராஜ வாழ்க்கை நாளை உன் சொந்தம்

பாதை முழுதும் கோடி மலர்கள்
பாடி வருமே தேவ குயில்கள்
உன்னாடை ஹே மிதக்கின்ற பாலாடை
உன் காலை ஹே குளிப்பாட்டும் நீரோடை
வெயில் நாளும் சுடுமென தேகம் கெடுமென
ஜன்னல் திரையிடும் மேகம்
இரு காதல் விழிகளில் வீசும் ஒளிகளில்
பிறையும் பெளர்ணமியாகும்
சந்தோஷம் உன்னோடு கைவீசும் எந்நாளும்

நீதானே எந்தன் பொன் வசந்தம்
புது ராஜ வாழ்க்கை நாளை உன் சொந்தம்
என் வாசல் ஹே வரவேற்கும் அந்நேரம்
பொன் சொர்க்கம் ஹே அரங்கேறும் கண்ணோரம்

ஈர இரவில் நூறு கனவு
பேதை விழியில் போதை நினைவு
பன்னீரில் ஹே இளந்தேகம் நீராடும்
பனிப்பூக்கள் ஹே உனைக்கண்டு தேனூறும்
நீ ஆடை அணிகலன் சூடும் அறைகளில்
ரோஜா மல்லிகை வாசம்
முக வேர்வைத் துளியது போகும் வரையிலும்
தென்றல் கவரிகள் வீசும்
நெஞ்சோரம் தள்ளாடும் முத்தாரம் எந்நாளும்

நீதானே எந்தன் பொன் வசந்தம்
புது ராஜ வாழ்க்கை நாளை உன் சொந்தம்
என் வாசல் ஹே வரவேற்கும் அந்நேரம்
பொன் சொர்க்கம் ஹே அரங்கேறும் கண்ணோரம்

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்...ஆஹாஹாஹாஹாஹ

SANDHANA POOVA - ODANGAL



படம்: ஓடங்கள்
இசை: சம்பத் செல்வன்
குரல்: எஸ்.பி.பி
பாடல்: வைரமுத்து

சந்தனப் பூவச்  சம்மதம் கேட்க போறேன் போறேன்
பங்குனி மாசம் பரிசம் போட வாறேன் வாறேன்
உனது உதட்டில் எனது உதடு கவிதைகள் தீட்டுமே
காமன் தேசம் கடிதம் போட்டு பாராட்டுமே

முன்னம் அடி கொடுத்த பெண்ணே
அன்று  கன்னம் வலிக்கவில்லை கண்ணே
தாமரை மோதினால் ரணமிருக்குமா
தென்றலும் தீண்டினால் வலியெடுக்குமா
பூவே பேசு ஒரு பார்வை வீசு
முத்தம் தந்ததால் மூச்சு சூட்டிலே
மீசை கருகி போச்சு
அன்னமே இப்படி ஆனது எப்படி பாஸாவது ?



உங்க கட்சி அது வேறு
எங்க கட்சி அது வேறு
காதலி காதலில் கட்சி ஏதடி
கண்மணி என்னுடன் ஒத்து ஊதடி
சேலை மாத்து மாலை மாற்று
பத்தே மாசத்தில் பரீட்சை எழுதி
நான் பாசு பண்ண வேணும்
நீயும் நானும் ஒன்னா சேர்ந்தா
ஜிங்கு னக்கடி ஜினக்கு னக்கடி தான்




Tuesday, April 19, 2016

RAGAM THALAM BHAVAM PAADAL - KADHODU THAAN NAAN PESUVEN




படம் : காதோடு தான் நான் பேசுவேன்
குரல் : எஸ்.பி.பி., வாணி ஜெயராம்

ராகம் தாளம் பாவம் பாடல்
நான்கும் சேர்ந்தால் இசை வரும்
நான் பாடும் சங்கீதம் காதல் - என்றும்
ஆனந்த கல்யாண வாசல்

ராகம் தாளம் பாவம் பாடல்
நான்கும் சேர்ந்தால் இசை வரும்
நான் பாடும் சங்கீதம் காதல் - என்றும்
ஆனந்த கல்யாண வாசல்

நான் தேடும் சங்கீதம் நீயே - எந்தன்
ராகத்தில் கல்யாணி நீயே

வெண்ணீல கண்கள் விளையாடும் திங்கள்
பெண்ணாக உருவாகும் என் முன்னே
வெண்ணீல கண்கள் விளையாடும் திங்கள்
பெண்ணாக உருவாகும் என் முன்னே
பொன்னான உள்ளம் என் இல்லம் தேடி
பொன்னான உள்ளம் என் இல்லம் தேடி
என் வாழ்வில் உறவாடக்  கண்டேன்
நீ பேசும் மொழி கூட வீணை
நீதானே அறிவாய் பெண்மானை

ராகம் தாளம் பாவம் பாடல்
நான்கும் சேர்ந்தால் இசை வரும்
நான் பாடும் சங்கீதம் காதல் என்றும்
ஆனந்த கல்யாண வாசல்
நான் தேடும் சங்கீதம் நீயே எந்தன்
ராகத்தில் கல்யாணி நீயே

யாழ் போல உன்னை நான் மீட்ட வேண்டும்
உன் மேனி பருவங்கள் என் கையில்
யாழ் போல உன்னை நான் மீட்ட வேண்டும்
உன் மேனி பருவங்கள் என் கையில்
அதில் ஏழு ஸ்வரமும் உருவாக வேண்டும்
அதில் ஏழு ஸ்வரமும் உருவாக வேண்டும்
நான் அறியாத கலைதானே கண்ணா
காற்றோடு இசைக்கின்ற ராகம்
கையோடு இணைகின்ற தேகம்

ராகம் தாளம் பாவம் பாடல்
நான்கும் சேர்ந்தால் இசை வரும்
நான் பாடும் சங்கீதம் காதல் என்றும்
ஆனந்த கல்யாண வாசல்
நான் தேடும் சங்கீதம் நீயே எந்தன்
ராகத்தில் கல்யாணி நீயே

KAMBAN ENGU PONAAN - JAATHI MALLI


படம் : ஜாதி மல்லி 
இசை : மரகதமணி 
குரல் : எஸ்.பி.பாலசுப்ரமணியம் , சித்ரா
பாடல் : வைரமுத்து

கம்பன் எங்கு போனான் ஷெல்லி என்ன ஆனான்
நம்மைப்  பாடாமல்
லைலா செத்துப் போனாள் மஜ்னு செத்துப் போனான்
நம்மைப் பாராமல்
கண்ணீரே இல்லாத காதல் சூத்திரம்
கண்டோமே கண்டோமே நாங்கள் மாத்திரம்
இது ஒரு புது முறை இதில் என்ன வரைமுறை
வருகிற தலைமுறை வணங்கட்டும் இருவரை

கம்பன் எங்கு போனான்..

இது கையில் கட்டிய தாலி
பலர் கழுத்தில் உள்ளது போலி
இந்த குறுகிய வட்டம் இனி சரி வருமா
உங்கள் கோட்டுக்குள் மழை பெய்யுமா
அணை விட்டுத்  தாவிய வெள்ளம்
இது கட்டுக் காவலை வெல்லும்
உங்கள் விதிகளும் சதிகளும் நிரந்தரமா
இது விலங்கிட்ட சுதந்திரமா
எங்கள் பெயரை  யாரும் கேட்டால் புர்ர்ர் என்போம்
எங்களுக்குள்ளே என்ன உறவென்றால் புர்ர்ர் என்போம்
விலங்குகள் தடை இல்லை விதிகளும் தடை இல்லை
மரபுகள் தடை இல்லை மனிதரும் தடை இல்லை

கம்பன் எங்கு போனான்..

இது யுத்தம் இளமையின் யுத்தம்
இனி துச்சம் உறவுகள் துச்சம்
உங்கள் கட்டு திட்டம் சட்ட திட்டம் தள்ளி வையுங்கள்
இல்லை கடலுக்குள் தள்ளி விடுங்கள்
அட புத்தம் புதியது சந்தம்
இது முத்தம் எழுதிய பந்தம்
இனி இளையவர் எங்களுக்கு குரல் கொடுங்கள்
அட பழையவர் வழி விடுங்கள்
காதலை தடுத்தவர் கதை என்ன ஆனது புர்ர்ர் தானே
கை கொண்ட விலங்கும் நாங்கள் நினைத்தால் புர்ர்ர் தானே
நினைப்பது நடக்கணும் இது எங்கள் இலக்கணம்
இனி வரும் தலைமுறை இதை மட்டும் படிக்கணும்

கம்பன் எங்கு போனான்..

Friday, April 15, 2016

SAMSARAM SAMSARAM SAKALA DHARMA SAARAM - SAMSARAM



படம்: சம்சாரம்
பாடல்: கொத்தமங்கலம் சுப்பு
இசை: சுசர்லா தக்ஷினாமூர்த்தி  / ஏமனி சங்கர சாஸ்த்ரி
குரல் : A.M. ராஜா

சம்சாரம் சம்சாரம்
சகல தர்ம சாரம்
சுக ஜீவன ஆதாரம்
சம்சாரம் சம்சாரம்

கணவன் மனைவி ஒன்றாய்
இரு கண்ணும் மணியும் போலே
இணை பிரியாது
இளம் பாலகர் விளையாடும்

சம்சாரம் சம்சாரம்..

உறவோடு உண்ண வேண்டும்
ஊரோடு வாழ வேண்டும்
பெரியோரைப்  பணிய வேண்டும்
சிறியோரைக்  காக்க வேண்டும்

சம்சாரம் சம்சாரம்..

சம்சார சாகரத்தில்
துயர் தாங்கொணாத போதும்
தாரமோடு கணவன்
அதைத் தாங்கி வாழ வேண்டும்

சம்சாரம் சம்சாரம்
சகல தர்ம சாரம்
சுக ஜீவன ஆதாரம்
சம்சாரம் சம்சாரம் ..

samsaaram 
samsaaram samsaaram 
sakala dharma saaram suka jeevana aadhaaram
samsaaram samsaaram

kaNavan manaivi ondraai iru kaNNum maNiyum pole
kaNavan manaivi ondraai iru kaNNum maNiyum pole
iNai piriyaadhu iLam baalagar viLaiyaadum
samsaaram samsaaram sakala dharma saaram suka jeevana aadhaaram

uravodu uNNa veNdum oorodu vaazha veNdum
uravodu uNNa veNdum oorodu vaazha veNdum
periyorai paNiya veNdum siriyorai kaakka veNdum
samsaaram samsaaram sakala dharma saaram suka jeevana aadhaaram
samsaaram samsaaram

samsaara saagarathil thuyar thaangoNaadhapodhum
samsaara saagarathil thuyar thaangoNaadhapodhum
thaaramodu kaNavan adhai thaangi vaazha veNdum
samsaaram samsaaram sakala dharma saaram suka jeevana aadhaaram
samsaaram samsaaram samsaaram

https://www.youtube.com/watch?v=87aTACl1iUw

https://en.wikipedia.org/wiki/Kothamangalam_Subbu

Kothamangalam Subbu (born Kothamangalam Subramanian, 10 November 1910 - 15 February 1974) was a poet, lyricist, author, actor and film director from Tamil Nadu, India. He wrote the cult classic Tamil novel Thillana Mohanambal and was awarded the Padma Shri. According to novelist Ashokamitran's memoirs, Subbu functioned as the No. 2 of the giant Gemini Studios of Chennai (formerly Madras), South India for over three decades and was a close associate of movie mogul S. S. Vasan, who established those studios and published the popular Tamil weekly Ananda Vikatan.

Contents


Early life

Subbu's natural name was Subramanian. He was born in the village of Kannariyenthal, near Pattukkottai, Tamil Nadu. His parents were Mahalingam Iyer and Kangammal. After losing his mother when he was young, Subbu received patronage from his younger aunt. He could continue his studies only up to 8th grade. After marrying a kin, Subbu settled in Kothamangalam and worked as an accountant in a business concern. However, his interests shifted towards Tamil drama, acting, singing and composing songs. By the late 1930s, Subbu received opportunities for acting in the then blossoming Tamil movies in Madras.

Career

Subbu directed the epic film Avvaiyar in which the great artiste of those days Smt K. B. Sundarambal played the lead role. Ashokamitran had profiled humorously how this film took shape in the Gemini Studios. Subbu, with his wife Sundari Bai, played a minor role in the movie as the husband of an incorrigible lady who refuses to serve Avvaiyar food. Subbu also directed Kannamma En Kadhali, that featured his wife Sundari Bai. Furthermore, Subbu acted as a hero in Miss Malini that was remade in Hindi as Mr. Sampath. Miss Malini was an adaptation of RK Narayan novel Mr Sampath. Dasi Aparanji was another movie in which Subbu and Sundari Bai played the leads. In addition, Subbu has acted in Tamil movies Thiruneelakantar and Pava Mannippu.
As a writer Subbu's most well-known work is Thillana Mohanambal that was transformed into a popularly and critically successful Tamil movie, starring Sivaji Ganesan and Padmini. Subbu was awarded the Padma Shri for authoring this novel, which originally appeared as a weekly serial in the Anantha Vikatan. Respected for his encyclopedic knowledge of music and satirical writing style, Subbu's tongue-in-cheek writing won the appreciation of many. He authored Rao Bahadur Singaram, Bandanallur Bama, Ponnivanathu Poonguyil, Miss Radha, and Manju Virattu (a collection of short stories)
Kothamangalam Subbu has written several novels using the pen name of Kalaimani and penned Gandhi Mahan Kathai narrating the life of Mahatma Gandhi in folklore form.

Legacy

Ananda Vikatan magazine is currently[when?] republishing the works of this writer, lyricist, director and actor. As an exponent of the traditional folk form of narrating stories in Tamil Nadu, the Villu Pattu, Kothamangalam Subbu popularised the lives of many Indian luminaries using the Villu Paatu..[1]

Subbu's wife, Sundari Bai, was a popular actor, known for her versatility in playing character roles in movies such as Kannamma En Kadhali, Sumathy En Sundari, Chandralekha, Bama Rukmani and Avvaiyar.





Thursday, April 14, 2016

NEELA VANNA KANNAA VAADAA - MANGAIYAR THILAGAM



படம்: மங்கையர் திலகம்
பாடல்: மருதகாசி
இசை: S. தக்ஷிணாமூர்த்தி
குரல்: R. பாலசரஸ்வதி


நீலவண்ணக் கண்ணா வாடா
நீ ஒரு முத்தம் தாடா
நிலையான இன்பம் தந்து
விளையாடும் செல்வா வாடா

நீலவண்ணக் கண்ணா வாடா

பிள்ளையில்லா கலியும் தீர
வள்ளல் உந்தன் வடிவில் வந்தான்
எல்லையில்லா கருணை தன்னை
என்னவென்று சொல்வேனப்பா

நீலவண்ணக் கண்ணா வாடா

வானம்பாடி கானம் கேட்டு
வசந்தகால தென்றல் காற்றில்
தேன்மலர்கள் சிரிக்கும் மாட்சி
செல்வன் துயில் நீங்கும் காட்சி

நீலவண்ணக் கண்ணா வாடா

தங்க நிறம் உந்தன் அங்கம்
அன்பு முகம் சந்திர பிம்பம்
கண்ணால் உனைக்  கண்டால் போதும்
கவலையெல்லாம் பறந்தே போகும்

சின்னஞ்சிறு திலகம் வைத்து
சிங்காரமாய் புருவம் தீட்டி
பொன்னாலான நகையும் பூட்ட
கண்ணா கொஞ்சம் பொறுமை காட்டு


நீலவண்ணக் கண்ணா வாடா

நடுங்கச் செய்யும் வாடை காற்றே
நியாயமல்ல உந்தன் செய்கை
தடை செய்வேன் தாளைப் போட்டு
முடிந்தால் உன்  திறமை காட்டு

விண்ணில் நான் இருக்கும் போது
மண்ணில் ஒரு சந்திரன் ஏது
அம்மா என்ன புதுமை இது
என்றே  கேட்கும்  மதியைப் பாரு

இன்ப வாழ்வின் பிம்பம் நீயே
இணையில்லா செல்வம் நீயே
பொங்கும் அன்பின் ஜோதி நீயே
புகழ் மேவி வாழ்வாய் நீயே

https://en.wikipedia.org/wiki/Susarla_Dakshinamurthi

Notable filmography[edit]

YearFilmLanguageDirectorBannerCo-Music Directors
1946Narada NaradiTelugu
1949Laila MajnuTeluguP. S. Ramakrishna RaoBharani Picturesplayback singer only under C. R. Subburaman
1950Paramanandayya Shishyula KathaTeluguKasturi Siva Raoalso playback singer
1950SamsaramTeluguL. V. Prasad
1950SamsaramTamilL. V. Prasad
1950Sri Lakshmamma KathaTeluguGhantasala Balaramaiahalso playback singer
1951SarvadhikariTamilT. R. SundaramModern Theatresalso playback singer
1951SarvadhikariTeluguT. R. SundaramModern Theatresalso playback singer
1952ValaiyapathiTamilT. R. SundaramModern Theatres
1952KalyaniTamilAcharya M. MastanModern TheatresG. Ramanathan
1952Atthainti KaapuramTeluguAcharya M. MastanModern TheatresG. Ramanathan
1953SujathaSinhalaT. R. SundaramModern Theatres
1953DaasiTeluguL. V. PrasadRajyam PicturesC. R. Subburaman
1953Velaikari MagalTamilL. V. PrasadRajyam PicturesC. R. Subburaman
1955SantanamTelugualso playback singer
1955Seda SulangSinhalaT. SomesekeranAnanda Samarakoon
1955Mangaiyar ThilakamTamilL. V. PrasadVaidhya Films
1956IlavelpuTeluguD. YoganandLakshmi Productionsalso playback singer
1956Alibabavum 40 ThirudargalumTamilT. R. SundaramModern Theatres
1957Yaar PaiyanTamilT. R. RaghunathVijaya Films
1957Veera KankanamTelugu
1957BaagyavathiTamilL. V. PrasadRavi Productions
1959Krishna LeelaluTeluguChandrasekhara Rao Jampana
1959Ulagam SirikkiradhuTamilK. RamamurthyPrabhu Films
1960AnnapurnaTeluguV. Madhusudan Rao
1960Aasha SundariKannadaHunsur KrishnamurthyGowri Productions
1961PangaaligalTamilG. RamakrishnanIris Movies
1963NarthanasalaTeluguKamalakara Kameswara RaoRajyam Pictures
1983Shrimad Virata ParvamTelugu
1984Shrimad Virat Veerabrahmendra Swami CharitraTeluguN. T. Rama RaoRamakrishna Cine Studios
  1. Narada Naradi (1946) (music director)
  2. Laila Majnu (1949) (playback singer)
  3. Paramanandayya Shishyula Katha (1950) (playback singer and music director)
  4. Samsaram (1950) (music director)
  5. Shri Lakshmamma Katha (1950) (playback singer and music director)
  6. Sarvadhikari (1951) (playback singer and music director)
  7. Yaar paiyan (music director)
  8. Santanam (1955) (playback singer and music director)
  9. Ilavelpu (1956) (playback singer and music director)
  10. Veera Kankanam (1957) (music director)
  11. Annapurna (1959) (music director)
  12. Krishna Leelalu (1959) (music director)
  13. Narthanasala (1963)
  14. Shrimad Virata Parvam (1983)
  15. Shrimad Virat Veerabrahmendra Swami Charitra (1984)