திரைப்படம் : ஒரு இந்திய கனவு
பாடியவர்கள் : எஸ் பி பி வாணி ஜெயராம்
இசை : எம் எஸ் வி
அனாமிகா அனாமிகா அனாமிகா
என் பேரே எனக்கு மறந்துபோன இந்த வனாந்தரத்தில்
என்னை பெயர் சொல்லி அழைத்தது யார்
நீயா நீயா
என்னை ஒரு மின்னல்கீற்று என்றல்லவா நினைத்திருந்தேன்
நீ எப்படி அதில் நிரந்தர பாய் முடைந்தாய்
எனது யாத்திரையில் எல்லா மனிதர்களும்
எல்லை கற்களாய் இருக்க
நீ மட்டும் எனக்கு பாதை ஆகினாய்...எப்படி
பருவ காலங்களால் புஷ்பிக்காத என் தோட்டம்
உன் பார்வைகளால் புஷ்பித்ததே
தீ விழுந்தாலும் உருகாத என் நெஞ்சில்
ஒரு பூ விழுந்தபோது உருகியதேன்
இந்த காதல் மேகம்தான் மனம் என்னும் எரிமலையில்
மழை சிந்தி மழை சிந்தி
அதில் உல்லாச வனங்களை உற்பத்தி செய்யும் ..ம்ம்
இதய ரோஜாச்செடியில் இந்த ஒற்றை பூ பூத்துவிட்டால்
அத்தனை முட்களும் உதிர்ந்து போகின்றன
வாலிபம் ஏந்திபார்க்கும் திருவோடும் இதுதான்
வாலிபம் சூடிப்பார்க்கும் கிரீடமும் இதுதான்
முதலில் சப்தங்களுக்கு அர்த்தம் சரியாய் விளங்கவில்லை
இப்போதோ மௌனத்திற்கும்கூட உரை எழுத முடிகிறது
என் கண்கள் உன்னிடம் காதல் பிச்சை கேட்கும் அமுதசுரபிகள்
அமுத சுரபிகள் பட்டினி கிடக்கலாமா
உன் பார்வையை பிச்சை இடு
ம்ம் பிச்சை இடு
திரைப்படம் : ஜனனி
இசை : எம் எஸ் வி
பாடியவர்கள் : எஸ் பி பி எஸ் ஜானகி
வரிகள் :
ஆடுறது எந்த அம்மனோ
ஆட்டுவிக்க வந்த வம்பனோ
ஹா...ஆடுறது எந்த அம்மனோ
ஆட்டுவிக்க வந்த வம்பனோ
மாரியம்மனோ மதுரை வீரனோ
கருப்பஞ்சாமியோ கன்னிப்பெண் ஆவியோ
மான்விழி தேன்மொழி பாவையின் மேனியை விட்டு இறங்கு
ஹா...ஆடுறது எந்த அம்மனோ
ஆட்டுவிக்க வந்த வம்பனோ
மாரியம்மனோ மதுரை வீரனோ
கருப்பஞ்சாமியோ கன்னிப்பெண் ஆவியோ
மான்விழி தேன்மொழி பாவையின் மேனியை விட்டு இறங்கு
பாடுறது யாரு கொம்பனா
பாரதியின் கொள்ளுப்பேரனா
பாடுறது யாரு கொம்பனா
பாரதியின் கொள்ளுப்பேரனா
ஆவி இல்லேடா சாமி இல்லேடா
அம்மன் இல்லேடா ஆத்தா இல்லேடா
வாலிபர் உள்ளத்தை வாலிபால் ஆடிடும் வஞ்சிக்கொடி நான்
ஏய்.... ஆத்தா வராம ஆவி புடிக்காம ஆட்டம் போடுறது ஏம்மா
பாப்பா உன்னோட பாச்சா பலிக்காது பாவ்லா காட்டாதே சும்மா
ஹே ஹொ ஹொய் ஹொய்
ஆத்தா வராம ஆவி புடிக்காம ஆட்டம் போடுறது ஏம்மா
பாப்பா உன்னோட பாச்சா பலிக்காது பாவ்லா காட்டாதே சும்மா
அடி கட்டிலுக்கு தூக்கம் வருமா
கள்ளு பாட்டிலுக்கு போதை வருமா
உன்ன கண்டவங்க கண்மயங்கி ஆடுறபோது இங்க ஆட்டம் ஒனக்கு ஏம்மா
ஆத்தா வயத்திலே ஆடிப்பழகினேன் அதுவே ஆரம்ப மேடை
ஹார்ட்டுபீட்டுக்கு பாடிப் பழகினேன் நானொரு சங்கீத மேதை
ஹா ஹ ஹ ஹ ஹா ஹே ஹே ஹெ ஹே
ஆத்தா வயத்திலே ஆடிப்பழகினேன் அதுவே ஆரம்ப மேடை
ஹார்ட்டுபீட்டுக்கு பாடிப் பழகினேன் நானொரு சங்கீத மேதை
நான் பொறந்ததும் ஆட்டம் வந்தது
வாய் தொறந்ததும் பாட்டு வந்தது
இந்த ம ப த ப க ம ப ம த க தி மி தி மி த க
கேக்குற கொம்பன் யாருடா
திரைப்படம் : வாய் சொல்லில் வீரனடி
இசை : விஜெய் ஆனந்த்
பாடியவர்கள் : எஸ் பி பி வாணி ஜெயராம்
வரிகள் :
இதழ் நாடகம் அரங்கேறுமோ
விழி நீலாம்பரி பாடுமோ
இதழ் நாடகம் அரங்கேறுமோ
விழி நீலாம்பரி பாடுமோ
புது மாதுளை தரும் தேன் சுவை
தினம் பூபாளம் பாடுமோ
இதழ் நாடகம் அரங்கேறுமோ
விழி நீலாம்பரி பாடுமோ
உன்மேனிதான் பொன்வீணையோ
நான் மீட்ட வரவோ
நீ மீட்டவே என்மேனியை
உன் கையில் தரவோ
நீ பொங்கி வரும் கங்கை நதி
என் மஞ்சம் வரும் சிந்து நதி
நீ மெல்ல வந்து என்னைத்தொட
என் சேலை கொஞ்சம் வெட்கம் விட
இதழ் வெளுக்கும் உடல் சிலிர்க்கும்
அந்த மயக்கம் நமை தினம் அழைக்கும்
இதழ் நாடகம் அரங்கேறுமோ
விழி நீலாம்பரி பாடுமோ
புது மாதுளை தரும் தேன் சுவை
தினம் பூபாளம் பாடுமோ
பொன்மாலையில் பூச்சூடுவேன்
உன் தோளில் விழுவேன்
தாய்போலவே நாள்தோறுமே
தாலாட்ட வருவேன்
நீ சொல்லித்தரும் பள்ளியில் நான்
அதிகாலை வரை மாணவிதான்
நான் உன் மடியில் பிள்ளையடி
நீ அள்ளிதரும் வள்ளலடி
உயிர் உடலில் உள்ள வரைக்கும்
இந்த நெருக்கம் என்றும் தொடர்ந்திருக்கும்
இதழ் நாடகம் அரங்கேறுமோ
விழி நீலாம்பரி பாடுமோ
இதழ் நாடகம் அரங்கேறுமோ
விழி நீலாம்பரி பாடுமோ
புது மாதுளை தரும் தேன் சுவை
தினம் பூபாளம் பாடுமோ
இதழ் நாடகம் அரங்கேறுமோ
விழி நீலாம்பரி பாடுமோ
காதல் கலை தரும் நயம் எது எது என உனை
கேட்கும் பருவம் கனிய
காமன் ரதி பெரும் லயம் இது இது என மனம்
காலம் முழுதும் பயில
உன் பூங்கரம் கொஞ்ச என் போதைகள் மிஞ்ச
உன் பூங்கரம் கொஞ்ச என் போதைகள் மிஞ்ச
வண்ணமலர் மாலை வஞ்சி மகள் தோளை
பின்னுகின்ற வேளை வாராதோ
வானின் முகில் தரும் மழை விழும் நிலம் குளிர் பெறும்
கோடை வெம்மை தணிய
வாழை மடல் எனும் உடல் மதன் விடும் கணை சுட
ஆசை நதியில் நனைய
கை நாடுது கிள்ள என் நாணங்கள் தள்ள
கை நாடுது கிள்ள என் நாணங்கள் தள்ள
தொட்ட சுகம் பாதி மற்ற சுகம் மீதி
கட்டிலிடும் தேதி வாராதோ
திரைப்படம் : ஞானபறவை
இசை : எம் எஸ் வி
பாடியவர்கள் : எஸ் பி பி வாணி ஜெயராம்
வரிகள் : வாலி
சொல்லி தர நான் இருக்கேன் ராஜாத்தி
சொல்லி சொல்லி தேனெடுப்பேன் உன்னை சூடேத்தி
அடசொல்லி தர நான் இருக்கேன் ராஜாத்தி
அடி சொல்லி சொல்லி தேனெடுப்பேன் உன்னை சூடேத்தி
நீ தேனெடுக்கும்போது இதழ்களை இவள் பூட்டி வைப்பதேது
தொட்டால் போதும் ஊரும் பட்டால் மேலும் ஏறும்
விட்டால் கூட சேரும் முத்தாடு நெடுநேரம்
சொல்லிக் கொடு கேட்டுக்குறேன் இந்த ராஜாத்தி
நீ சொல்லச்சொல்ல தேன் கொடுப்பேன் ஒன்ன சூடேத்தி
ஆஹா.. சூடேத்தி.. சூடேத்தி... சூடேத்தி...
பருவ வீட்டின் புனித வாசல் திறக்க வேண்டும்
குடி வரத்தான் துடிக்கத் துடிக்க
ஹோ ஹோ ஹோ இளமை இருக்க
அஹ்ஹ் அஹ்ஹ்ஹ் ஹ
பருவ வீட்டின் புனித வாசல் திறக்க வேண்டும்
குடி வரத்தான் துடிக்கத் துடிக்க
ஹோ ஹோ ஹோ இளமை இருக்க
ஒருவரோடு ஒருவர் சேர்ந்து ஒருவராக சுகம் பெறத்தான்
விடிய விடிய அஹ்ஹ் அஹ்ஹ்ஹ் ஹ
விளக்கு எரிய அஹ்ஹ் அஹ்ஹ்ஹ் ஹ
வா வா சொர்க்கம் எந்த பக்கம் என்று தேடலாம்
நான்தான் என்னைக்கொண்டு உன்னைக்கொஞ்சம் மூடலாம்
சொல்லி தர நான் இருக்கேன் ராஜாத்தி
சொல்லி சொல்லி தேனெடுப்பேன் உன்னை சூடேத்தி
அடசொல்லி தர நான் இருக்கேன் ராஜாத்தி
அடி சொல்லி சொல்லி தேனெடுப்பேன் உன்னை சூடேத்தி
நீ தேனெடுக்கும்போது இதழ்களை இவள் பூட்டி வைப்பதேது
தொட்டால் போதும் ஊரும் பட்டால் மேலும் ஏறும்
விட்டால் கூட சேரும் முத்தாடு நெடுநேரம்
ஆ ஹ்ம்ம் ம்ம்
சொல்லிக் கொடு கேட்டுக்குறேன் இந்த ராஜாத்தி
நீ சொல்லச்சொல்ல தேன் கொடுப்பேன் ஒன்ன சூடேத்தி
ஆஹா.. சூடேத்தி.. சூடேத்தி... சூடேத்தி..
விரகம் தீர சரசலீலை புரியும் வேளை விரல் நகம் தான்
வலிக்க வலிக்க அஹ்ஹ் அஹ்ஹ்ஹ் ஹ
பதிக்க பதிக்க ஓ ஹோ ஹோ
வரம்பு மீறி நரம்பு நாடி நடனமாடி சுட சுடத்தான்
புடைக்க புடைக்க அஹ்ஹ் அஹ்ஹ்ஹ் ஹ
விருந்து படைக்க ஓ ஹோ ஹோ
நீதான் கட்டில் மெட்டு இட்டு கட்டு பாடி வா
காதல் உச்சக்கட்டம் தித்திக்கட்டும் நாடி வா
சொல்லி தர நான் இருக்கேன் ராஜாத்தி
சொல்லி சொல்லி தேனெடுப்பேன் உன்னை சூடேத்தி
அடசொல்லி தர நான் இருக்கேன் ராஜாத்தி
அடி சொல்லி சொல்லி தேனெடுப்பேன் உன்னை சூடேத்தி
நீ தேனெடுக்கும்போது இதழ்களை இவள் பூட்டி வைப்பதேது
தொட்டால் போதும் ஊரும் பட்டால் மேலும் ஏறும்
விட்டால் கூட சேரும் முத்தாடு நெடுநேரம்
ஆ ஹ்ம்ம் ம்ம்
சொல்லிக் கொடு கேட்டுக்குறேன் இந்த ராஜாத்தி
நீ சொல்லச்சொல்ல தேன் கொடுப்பேன் ஒன்ன சூடேத்தி
ஆஹா.. சூடேத்தி.. சூடேத்தி... சூடேத்தி..
திரைப்படம் - வாலிபன்
இசை : இளையராஜா
பாடியவர்கள் எஸ் பி பி ஜானகி
கன்யாகுமாரி கலைமதன ராணி..ஏய்
கஸ்தூரி மானே வரலாமா நானே
பாதாளம் அது மேலாக ஆகாசம் அது கீழாக
ஆகிப்போனதே இடம் மாறிப்போனதே ஹெ ஹே ஹே
கோபாலன்பாலா காமனவன் தோழா
என் ஆவல் தீர உன் விரகம் வார
மயக்கத்தில் மதுரசம் ஊற்று மதனாபிஷேகம் காட்டு
தாகமானதே அதில் நாணம் போனதே
ஜிங்குசக்கு ஜிங்குசக்கு ஜா ஹே
ஜிங்குசக்கு ஜிங்குசக்கு ஜா
வானகம் வையகம் ஒன்று சேரும் தருணமிது
ஆண்மையும் பெண்மையும் ஒன்றுகூடும் பருவமிது
காற்றோடு வானில் ஏறுவோம் கல்யாண ராகம் பாடுவோம்
வான்மீது வாழ்ந்து பார்க்கலாம் விண்மீனை மாலையாக்கலாம்
அம்மம்மா போவோமா கலையெல்லாம் அரங்கேரும்
மேகங்கள் விதானம் போடும்
காதல் மேனகை உடல் தங்க மாளிகை
ஜிங்குசக்கு ஜிங்குசக்கு ஜா
ஜிங்குசக்கு ஜிங்குசக்கு சா
கேட்டதை நீ கொடு மையல் தீயில் உருகுகிறேன்
தோளிலே தோள்கொடு காதல் தேனை பருகுகிறேன்
எங்கெங்கே என்ன கோலமோ எல்லாமும் காணும் நேரமோ
மேகங்கள் மஞ்சமாகுமோ மின்னல்கள் தீபம் ஏற்றுமோ
நீ பாதி நான் பாதி நீ எங்கே நானும் அங்கே
நாளெல்லாம் மன்மத ராகம்
ராஜலீலைகள் ரசமான சோலைகள்
ஜிங்குசக்கு ஜிங்குசக்கு ஜா
ஜிங்குசக்கு ஜிங்குசக்கு சா
ஹே கோபாலன்பாலா காமனவன் தோழா
என் ஆவல் தீர உன் விரகம் வார
பாதாளம் அது மேலாக ம்ம்ம்ம்ம் ஆகாசம் அது கீழாக
ஆகிப்போனதே இடம் மாறிப்போனதே ஆ
தாகமானதே அதில் நாணம் போனதே
ஜிங்குசக்கு ஜிங்குசக்கு ஜா ஹே
ஜிங்குசக்கு ஜிங்குசக்கு ஜா
திரைப்படம் : குருவிக்கூடு
இசை: கே வி எம்
வரிகள் : கண்ணதாசன்
பாடியவர் : எஸ் பி பி
பொன்னி நதி ஓரத்திலே ஏலேலோ
பொண்ணு ஒண்ணு காத்திருக்கு ஏலேலோ
பொன்னி நதி ஓரத்திலே ஏலேலோ
பொண்ணு ஒண்ணு காத்திருக்கு ஏலேலோ
பக்கத்தில அவன் இருந்தும் பார்க கூட முடியலியே
வெட்கத்துக்கு வெட்கம் இல்ல ஏலேலோ
பொன்னி நதி ஓரத்திலே ஏலேலோ
பொண்ணு ஒண்ணு காத்திருக்கு ஏலேலோ
நாளா பல பொழுதா அவ ஆளானதும் தாளாமலே
நாலு விரல் எளச்சுவிட்டா ஏலேலோ
பாலா இது பழமா இடை நூலா கண்ணு வேலா இன்னு
பாவிப்பய துடிச்சு நின்னான் ஏலேலோ
பொன்னி நதி ஓரத்திலே ஏலேலோ
பொண்ணு ஒண்ணு காத்திருக்கு ஏலேலோ
நெனைக்கும் கொஞ்சம் சிரிக்கும் அது துடிக்கும் வயசு
அணைக்கும் தலையணையை அதில் இருக்கும் மனசு
அவளும் அட அவனும் அந்த ரெண்டும் சிறுசு
சிறுசா அது இருந்தாலென்ன மனசோ பெருசு
வாயால் சொல்லி கேளாதது பாயில் பள்ளி கொள்ளாதது
வட்டமிட்டு ஓடுமடா ஏலேலோ
தாயோ இல்ல நீயோ சொல்லி கேளாதது
ஆசை என்னும் தத்துவத்தின் வேலையடா
ஏலேலோ
பொன்னி நதி ஓரத்திலே ஏலேலோ
பொண்ணு ஒண்ணு காத்திருக்கு ஏலேலோ
மணந்தா உன்ன மணப்பேன் என தவிக்கும் விழிகள்
அறிஞ்சோ தன்ன மறந்தோ அதை தடுக்கும் வழிகள்
இரண்டும் தனி தனியே தினம் படுக்கும் கிளிகள்
இருந்தாலென்ன கண்ணா இல்ல பேசும் மொழிகள்
மாமா கொஞ்சலாமா அட ஏம்மா பக்கம் வாமா என
நாணத்தையும் விட்டு விட்டு ஏலேலோ
ராஜா அடி ராணி எந்தன் கூஜா மலர்மேனி என
நெஞ்சுக்குள்ள கொஞ்சுதடா ஏலேலோ
maamaa konjalaamaa
ada yaemaa pakkam vaamaa ena
naaNaththaiyum vittu vittu
ElElO
raja adi raaNi endhan koojaa malar mEni ena
nenjikkuLLa konjudhalaa yElElO
படம்: பொன்னகரம்
பாடல் : சுல்தான் / காமகோடியான்
இசை: சங்கர் கணேஷ்
பாடியவர்: கே.ஜே.இயேசுதாஸ்
இருப்பவர்க்கு ஒரு வீடு இல்லாதவர்க்கு பல வீடு
யாரை நம்பி யாரும் இல்ல ஆண்டவன் துணையை நீ தேடு
வாழுகின்ற மக்களுக்கு வாழ்ந்தவர்கள் பாடமடி
பெற்றவர்கள் பட்ட கடன் பிள்ளைகளைச் சேருமடி
சேர்த்து வச்ச புண்ணியம் தான் சந்ததியைக் காக்குமடி
அந்த வகையில் இந்த நிலையில் எனக்கோர் காவல் ஏதடி
ஆடொன்று வளர்ப்பார்கள் தன வீட்டில்
மிக அன்பாக மேய்ப்பார்கள் வயக்காட்டில்
உறவொன்று விருந்தென்று வரும் போது
இந்த வெள்ளாடு உணவாகும் அப்போது
தெரியாமல் அடிப்பார்கள் தெரிந்தவர்கள்
உண்மை புரியாமல் வெறுப்பார்கள் நல்லவர்கள்
சரியான நேரத்திலே தெய்வம் வரும்
எது சரியென்று உள்ளங்கள் தெளிந்து விடும்
வாழுகின்ற மக்களுக்கு வாழ்ந்தவர்கள் பாடமடி
பெற்றவர்கள் பட்ட கடன் பிள்ளைகளைச் சேருமடி
சேர்த்து வச்ச புண்ணியம் தான் சந்ததியைக் காக்குமடி
அந்த வகையில் இந்த நிலையில் எனக்கோர் காவல் ஏதடி
irupavarukku oru veedu
illavadharku pala veedu
yaarai nambi yaarum illa
aandavan thunaiyai nee thaedu
vaazhugindra makkaLukku
VaazhndhavargaL paadam adi
petravargaL patta kadan
piLLaigaLai saerumadi
படம் : ஒரு விடுகதை ஒரு தொடர்கதை பாடியவர்கள் : பூரணி எஸ். பி . பாலசுப்ரமண்யம் இசை : கங்கை அமரன் வரிகள் : வாலி
அடி என்னோட வாடி
அந்த ஆத்தோரமா தென்னந்தோப்போரமா
ரொம்ப நாளாச்சு ஆடி
என் ராசாக்கிளி புது ரோசாச்செடி
நா ஒன்னோட ஜோடி ஐயோ அம்மா ஆமா
அடி என்னோட வாடி
வீட்டில் இருக்கிற தொல்லைகள பாத்தேன்
வெட்ட வெளியில மெத்த ஒண்ணு போட்டேன்
பாட்டு படிக்க ஹே... ங்கே... யே .....ஏ
பாட்டு படிக்க கூட ஒன்ன சேத்தேன்
பட்டு ஒடம்ப கட்டி அண போட்டேன்
யாரும் பாத்தா ஏதாச்சும் நடக்கும்
வேணாங்க தங்க மாமா
வீட்டுக்குள்ள நடக்கறதெல்லாம்
வெட்ட வெளி பாக்கலாமா
அட ம்ஹூம் வேணாம்... ஐயே
நாம பாக்காததா கண்டு பழகாததா
சொல்ல கேட்டு நட மாமா
என் ராசக்கண்ணு உம்மாமா பொண்ணு
வேகம் என்னத்துக்கு மாமா
அட ம்ஹூம் வேணாம்
ஒருபுறம் பார்த்தால் நீ ஜெயபாதுரி
ஓரக்கண் பார்த்தாய் ஜீனத்தை மாதிரி
ஒருபுறம் பார்த்தால் நீ ஜெயபாதுரி
ஓரக்கண் பார்த்தாய் ஜீனத்தை மாதிரி
நடையினை பார்த்தால் நீ ஜெயமாலினி
நாயகி நீ என் ஹேமாமாலினி
கே ஆர் விஜயா எம் ஆர் ராதிகா
அமிதாபை போலவே அழகான ரூபனே
அமோல் பாலிகர் போலவே வந்த தேவனே
கமலின் அழகும் ..ஐய்யோ ...ரஜினி ஸ்டைலும்
தரிகிட தலாங்கு தகதிம்
கமலின் அழகும் ரஜினி ஸ்டைலும்
இணைந்ததொரு எவரும் மயங்கும்
இளமை துடிக்கும் கலை மகன்
மாவீரன் தர்மேந்த்ரா ஜிதேந்த்ரா
என்னை மயக்கும் மன்னன் நீதானே
உன்னை எந்நாளும் காணென்னும் கன்னி நான்தானே
இனி என்ன உனக்கிந்த மான்தானே
ஐயைய்யோ... அம்மம்மா
மாவீரன் தர்மேந்த்ரா ஜிதேந்த்ரா
என்னை மயக்கும் மன்னன் நீதானே
திரைபடம் : யார் பாடியவர்கள் : எஸ் பி பாலசுப்ரமண்யம் இசை : வி.எஸ். நரசிம்மன் வரிகள் : வாலி
அபிராமியே உமாமஹேஷ்வரி
சிவகாமியே கலாஜடாதரி
அபிராமியே உமாமஹேஷ்வரி
சிவகாமியே கலாஜடாதரி
சாமவேதம் ஓதும் நீலகண்டன்
வாமபாகம் வாழும் ஈஷ்வரி
காமகோடி பீடம் ஆளுகின்ற
நாமம் கோடி போற்றும் ஷங்கரி
தீயசக்தி பூந்தலத்தில் மாய
தெய்வ சக்தி மாநிலத்தில் வாழ
வருக வருக வந்து வரமருளே
அபிராமியே உமாமஹேஷ்வரி
சிவகாமியே கலாஜடாதரி
பூங்காற்று தாலாட்டும் மாங்காட்டில்
நீங்காத ஓங்காரி நீயே
பாம்போடு வேம்பாடும் வேற்காட்டில்
அருளாட்சி புரிகின்ற தாயே
நான்கு வேதம் பஞ்சபூதம் ஆறுகாலங்கள்
ஏழுலோகம் எட்டுதிக்கும் ஏத்தும் பாதங்கள்
தேவர் தம்மோடு மூவரும் இடைவிடாது
பணியும் கருணைக்கடலே
பாவம் மேலோங்குமோ தருமம் கீழாகுமோ
பூமி தடுமாறவே பேய்கள் நடமாடுமோ
வினையில் விளையும் பகையும் துயரும் பொடிபட
வருக வருக வந்து வரமருளே
அபிராமியே உமாமஹேஷ்வரி
சிவகாமியே கலாஜடாதரி
காஞ்சிநகர் வாழும் காமாட்சியே
கையில் கிளி ஏந்தும் மீனாட்சியே
ஏழு உலகுனது அரசாட்சியே
என்ன நடந்தாலும் நீ சாட்சியே
மூடனுக்கும் வாழ்வளித்த தாயே
மூலமான ஆதிசக்தி நீயே
மஹிஷாசுரன் செய்த வினை தீர்த்தவள்
முருகேசனின் கையில் வேல் சேர்த்தவள்
அபிராமிபட்டர்க்கு நூல் தந்தவள்
சம்பந்தன் அழும்போது பால் தந்தவள்
வேண்டும் வரம் தர தேவி திருமுகம்
மீண்டும் மலர்ந்திடுமோ
ஈன இருளிடை ஞானஒளி வர
பொழுது புலர்ந்திடுமோ
பத்ரகாளி வருக ருத்ரகாளி வருக
சிம்மமேனி வருக சீற்றமோடு வருக
சூலி நீலி அம்மா தாயே ஜனனி..